தமிழகத்தில் இருக்கும் மூன்று கோவில்களில் நாள்முழுவதும் அன்னதான திட்டத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். மேலும் அவருடன் இந்து சமய அறநிலை துறை அமைச்சர் சேகர் பாபு உடன் இருந்தார்.
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தமிழகம் முழுவதும் தொடர்ந்து பல்வேறு நலத்திட்டங்களை தொடங்கி வைத்து வருகிறார். முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நாள்முழுவதும் அன்னதான திட்டத்தை சென்னை தலைமைச் செயலகத்தில் காணொலி காட்சி மூலம் தொடங்கி வைத்தார். அதனை தொடர்ந்து தமிழ்நாட்டிலுள்ள மூன்று முக்கிய கோவில்களில் பக்தர்களுக்கு பயனளிக்கும் வகையில் நாள்முழுவதும் அன்னதானம் அளிக்கும் வகையில் புதிய திட்டம் தொடங்கி வைக்கப்பட்டுள்ளது.
அதில் ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோவில், மதுரை மீனாட்சி கோவில் மற்றும் திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோவிலில் இந்த திட்டங்களை தொடங்கி வைத்துள்ளர். இதனால், கோவில்களுக்கு பிரார்த்தனை செய்ய வரும் பக்தர்கள் மற்றும் அந்த பகுதியில் இருக்கும் மக்களுக்கு இந்த திட்டம் மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என்று தெரிவிப்பட்டுள்ளது.