“ஆளப்போறான் தமிழன் உலகம் எல்லாமே” வணிக நிறுவனங்களுக்க.., தமிழக அரசு கொடுத்த அதிரடி அறிக்கை..?
வணிக நிறுவனங்களில் ஆங்கிலத்தில் இருக்கும் பெயர்ப்பலகைகள் அகற்றி தமிழில் வைக்க அரசு உத்தரவிட்டுள்ளது.. அதற்கான ஆலோசனை கூட்டம் நேற்று சென்னை தலைமைச் செயலகத்தில் நடைபெற்றது.
இந்த கூட்டத்தில் தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித் துறை அமைச்சர் சாமிநாதன் மற்றும் தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறை அமைச்சர் சி.வி.கணேசன் மற்றும் அரசு உயர் அதிரிகாரிகள் கலந்துகொண்டனர்.
மேலும் இந்த கூட்டத்தில் தமிழ்நாட்டிலுள்ள வணிக நிறுவனங்கள், உணவகங்கள், கடைகள், வணிக வளாகங்கள் ஆகியவற்றின் பெயர்ப் பலகைகள் அரசாணையில் குறிப்பிடப்பட்டுள்ளவாறு, தமிழில் பெயரிட வேண்டும்.
தமிழுக்கு பின் ஆங்கிலத்திலும், தத்தம் தாய்மொழிகளிலும் 5:3:2 என்ற வீதத்தில் பெயர் வைத்துக்கொள்ளலாம் என அறிவுறுத்தயுள்ளது.
பின் இதனை தொடர்ந்து பேசிய செய்தித்துறை அமைச்சர் சாமிநாதான்.., வணிக நிறுவனங்களுக்கு உரிமங்கள் வழங்குதல் மற்றும் புதுப்பித்தலின் போதே பெயர்ப்பலகைகள் தமிழில் மாற்றிக்கொள்ள வேண்டும்.
தமிழுக்கு முதன்மை இடம் கொடுத்த பின்னரே.., பிற மொழிகளில் பெயர் பலகை வைத்துக்கொள்ளலாம்,
தமிழில் முதன்மையாக இருப்பதை உறுதி செய்யப்பட்ட பின்னரே நிறுவனங்களுக்கு ஒப்புதல் வழங்கப்படும் எனவும் அவர் பேசினார்.
இதற்காக பல மாவட்டங்களில்.., அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர்.. எனவும் அவர் தெரிவித்தார்..
சிறுகதைகள் – 75 | தொடர் கதை – 2 | கிரைம்- 572 + | கவிதைகள் – 150 + | எழுத்தாளர் – 4000 + | ஆன்மிகம் தொகுப்பாளர்
நம்மை வீழ்த்தியவர்கள் முன் ஜெயிக்க வேண்டுமே.. தவிர அடுத்தவர்களை வீழ்த்தி ஜெயிக்க கூடாது..