பொங்கலுக்கு வெளியாக இருக்கும் துணிவு மற்றும் வாரிசு படம் வெளியாக உள்ள நிலையில் துணிவு படத்தின் ட்ரைலர் வெளியாகி பெரும் எதிர்பார்ப்பையும், வரவேற்ப்பையும் ஏற்படுத்தி வருகிறது.
அஜித் நடித்த துணிவு படமும் விஜய் நடித்த வாரிசு படமும் பொங்கலுக்கு வெளியாகும் என்ற அறிவிப்பு வந்தது முதல் இன்று வரை அந்த இரு படங்களுக்கும் எதிர்பார்ப்பு ரசிகர்ளிடம் அதிகரித்துக்கொண்டே வருகிறது. இரு படங்களின் பாடல்களும் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்ற நிலையில், கடந்த வாரம் 5000 ரசிகர்களுடன் மிக பிரமாண்டமாக அந்த படத்தின் வாரிசு படத்தின் ஆடியோ லான்ச் நிகழ்ச்சி நடைபெற்றது. இதனை அடுத்து விஜயின் குட்டி ஸ்டோரியால் ரசிகர்களின் கவனம் முழுவதும் வாரிசு படத்தின் மீது திரும்பிய நிலையில் புத்தாண்டு தினத்தை முன்னிட்டு துணிவு படத்தின் ட்ரைலர் வெளியானது.
அஜித்தின் மாறுபட்ட நடிப்புடன் வெளியான இந்த ட்ரைலர் சினிமா ரசிகர்களிடம் பெரும் ஆர்வத்தை, ஆவலையும் தூண்டியுள்ளது. மேலும் துணிவு ட்ரைலரை வாரிசு படக்குழு பார்த்த நிலையில், வாரிசு ட்ரைலரில் புதிய மாற்றங்களை ஏற்படுத்தி வருவதாகவும், வாரிசு படத்தின் ட்ரைலரை வரும் 3 அல்லது 4ம் தேதி வெளியிட திட்டமிட்டுள்ளதாகவும் தகவல் கசிந்து வருகிறது. மேலும் துணிவு படத்தின் ட்ரைலர் யுடியூபில் ஒரே நாளில் 30 மில்லியன் பார்வையாளர்களை கடந்து சாதனை புரிந்து வருகிறது. இதனால் வாரிசு படத்தின் ட்ரைலருக்காக ரசிகர்கள் காத்திருக்கின்றனர்.