பழனியில் அகில இந்திய விவசாய தொழிலாளர் சங்கம் சார்பில் காத்திருப்பு போராட்டம் நடைபெற்றது.
திண்டுக்கல் மாவட்டம் பழனி வருவாய் கோட்டாட்சியர் அலுவலகம் முன்பு அகில இந்திய விவசாய தொழிலாளர் சங்கம் சார்பில் காத்திருப்பு போராட்டம் நடைபெற்றது .
இதில் தொப்பம்பட்டி, பாறைப்பட்டி ,கோரிக்கடவு மற்றும் அதை சுற்றியுள்ள கிராமங்களில் வசிக்கும் மக்களுக்கு வீட்டு மனை பட்டாவை உடனடியாக வழங்க வேண்டும் .
மானூர் விநாயகர் கோயில் காலனி தெருவில் வாடகைக்கு நீண்ட காலமாக குடியிருந்து வரும் 30க்கும் மேற்பட்ட ஏழை மக்களுக்கு மனை பட்டா வழங்க வேண்டும். விவசாயிகள் மேல் போடப்பட்ட வழக்கை வாபஸ் வாங்க வேண்டும் மேலும் சொந்த வீட்டு மனை இடமில்லாத ஏழைகளுக்கு இலவச மனை பட்டா வழங்க வேண்டும் போன்ற கோரிக்கைகளை முன்னிறுத்தி காத்திருப்பு போராட்டம் நடைபெற்றது. இதில் கட்சி பொறுப்பாளர்கள், விவசாயிகள், பெண்கள் மற்றும் ஆண்கள் என 70-க்கும் மேற்பட்டோர் இந்த காத்திருப்பு போராட்டத்தில் கலந்து கொண்டனர்.