ஆதினம் ஆபாச வீடியோ மிரட்டல்..! கைதான ஸ்கெட்ச் செந்தில்..! பின்னணியில் வெளியான பல திடுக்கிடும் தகவல்..!
மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள தருமபுரம் ஆதீனத்தின் 27-வது குருமகா சந்நிதானம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரிய சுவாமிகளுக்கு கடந்த சில மாதங்களுக்கு முன் அவர், ஆசிரம்பதிற்கு வரும் பெண்களிடம் ஆபாசமாக பேசுவதாகவும், ஆபசமாக நடந்துகொள்வதாக சில குற்றச்சாட்டுகள் எழுந்ததாக கூறி சில மர்ம நபர்கள் ஞானசம்பந்த பரமாச்சாரிய சுவாமியின் வாட்ஸ்அப் எண்ணிற்கு வீடியோ, ஆடியோ இருப்பதாகக் கூறி பணம் கேட்டு மிரட்டுவதாக ஒரு செய்தி பல மாதங்களாக இருந்து வருகிறது.
இதனால் பதறி போன ஞானசம்பந்த பரமாச்சாரிய சுவாமி, இது பற்றி அவரது சகோதரரிடம் தெரிவித்துள்ளார். பின் யதாக ஆதீனகர்த்தரின் சகோதரரும், அவரது உதவியாளருமான விருத்தகிரி, மயிலாடுதுறை மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் கடந்த பிப்ரவரி 25- ஆம் தேதி புகார் அளித்திருந்தனர்.
புகாரின் ஏற்ற காவல்துறையினர் அந்த எண்ணை ட்ராக் செய்து பாஜக மயிலாடுதுறை மாவட்டத் தலைவர் அகோரம் உள்ளிட்ட 9 பேர் மீது பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்து. கலைமகள் கல்வி குழுமத்தின் தாளாளர் குடியரசு, ஸ்ரீநிவாஸ், விக்னேஷ், வினோத் ஆகிய 4 பேரை போலீசார் கடந்த பிப்ரவரி 28ம் தேதி கைது செய்தனர்.
அதனை தொடர்ந்து மகாராஷ்டிரம் மாநிலம் ராய்கர் மாவட்டம், அலிபாக்கில் உள்ள தனியார் விடுதியில் தங்கியிருந்த அகோரத்தை கடந்த 15-ம் தேதி மயிலாடுதுறை தனிப்படை போலீஸார் கைது செய்து அழைத்து வந்து திருச்சம்பள்ளியில் உள்ள தரங்கம்பாடி மாவட்ட உரிமையியல் மற்றும் நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதி கனிமொழி மார்ச் 28-ம் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டிருந்த நிலையில் மயிலாடுதுறை கிளைச் சிறையில் அடைத்தனர்.
இந்நிலையில் பாஜக மாவட்ட தலைவர் அகோரத்தை 5 நாள் போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க வேண்டும் என்று மயிலாடுதுறை காவல் ஆய்வாளர் சுப்ரியா நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார்.
இதனையடுத்து தரங்கம்பாடி மாவட்ட உரிமையியல் மற்றும் நீதித்துறை நடுவர் நீதிமன்றத்திற்கு போலீசார் அழைத்து சென்றனர். வழக்கை விசாரித்த நீதிபதி கனிமொழி அகோரத்தை விசாரனைக்காக ஒரு நாள் மட்டும் காவலில் எடுத்து விசாரிக்க உத்தரவிட்டுள்ளார். இதையடுத்து அகோரத்தை போலீசார் விசாரணைக்கு மயிலாடுதுறை காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்றனர். விசாரணைக்குப் பின்னர் மார்ச் 27 மாலை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தவுள்ளனர்.
இந்த வழக்கில் ஏற்கனவே கைது செய்யப்பட்ட நான்கு பேர் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்திருந்தனர். அதன் பின் நிபந்தனை பெயரில் ஜாமீன் மூலம் வெளிவந்தனர். இந்த நிலையில் வழக்கின் முக்கிய குற்றவாளியான செந்தில் தலைமறைவாக இருக்கும் நிலையில் முதன் முறையாக முன்ஜாமின் வழங்க கோரி மயிலாடுதுறை மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார்.
இதுகுறித்து நீதிபதி கூறியதாவது நீங்கள் கைது செய்யப்பட்டால் மட்டுமே குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய முடியும், என தெரிவித்துள்ளனர்.
அதையடுத்து செந்திலின் முன் ஜாமின் மனு தள்ளுபடி செய்யப்பட்டதை தொடர்ந்து உத்தரப்பிரதேச மாநிலம் வாரணாசியில் செந்தில் தலைமறைவாக இருப்பதாக சிறப்பு தனிப்படை போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அதனை தொடர்ந்து அங்கு இரண்டு நாட்களாக தீவிர தேடுதல் வேட்டை நடத்திய போலீசார் செந்திலை கைது செய்துள்ளனர்.
பல ஆண்டுகள் தருமபுரம் ஆதீனத்தின் கூடவே இருந்த செந்தில் ஆதினத்தில் பணம் புழக்கம் இருப்பதை அறிந்து அவரிடம் பணம் பறிக்க திட்டமிட்டுள்ளார். நித்தியானந்தா விவகாரத்தைப் போல ஆபாச படம் இருப்பதாக மிரட்டி பெரிய அளவில் பணம் சம்பாதிக்கலாம் என நினைத்த செந்தில்.
இதற்காக பாஜக மாவட்ட தலைவர் அகோரம் உள்ளிட்ட பலரை தொடர்பு கொண்டு உள்ளார். இதையடுத்தே இந்த மிரட்டல் நாடகம் அரங்கேறியிருக்கிறது. தற்போது செந்தில் கைது செய்யப்பட்டு இருக்கும் நிலையில் வழக்கு தொடர்பான மேலும் பல அதிர்ச்சி தரும் தகவல்கள் வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
– லோகேஸ்வரி.வெ