நடிகையர் திலகம் சிவாஜி கணேஷன்.. ஆட்டோகிராப் பக்கம்..!
சிவாஜி கணேசன்:
நாடக கலைஞர் ,திரைப்பட நடிகர் மற்றும் முன்னாள் அரசியல்வாதி என பன்முக திறமை கொண்டவர் நடிகர் சிவாஜி கணேசன். ஆரம்ப காலக்கட்டத்தில் மேடை நாடகங்களில் நடித்துக் கொண்டிருந்த இவர் 1952 இல் பி. ஏ. பெருமாள் முதலியார் தயாரித்த பராசக்தி திரைப்படத்தின் மூலம் தமிழ்த் திரையுலகில் அறிமுகமானார்.
வித விதமான கதாபாத்திரங்களை தேர்வு செய்து அதில் திறம்பட நடிப்பது இவர்க்கென தனி சிறப்பாகும். தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் மற்றும் இந்தி மொழிகளில் 288 படங்களில் நடித்துள்ளார்.

தமிழில் மட்டும் திரைப்படத்துறையில் 250 படங்களுக்கு மேல் கதாநாயகனாக நடித்த பெருமைக்குரிய ஒரே நடிகர் சிவாஜி கணேசன்.
நடிகர் திலகம்:
நல்ல குரல்வளம், நடிகர் திலகம், நடிப்புச் சக்கரவர்த்தி, சிம்மக்குரலோன் என்று பெரும்பாலான மக்களால் அழைக்கப்படுகின்றார். நீண்ட வசனங்களை எளிதில் உள்வாங்கிக் கொண்டு அதை உணர்ச்சிபூர்வமாக திரையில் பிரதிபலிக்கும் ஆற்றல் இவருக்கு இயல்பாகவே உள்ளது என்றே சொல்லலாம்.
இப்படி இவர் பேசி சென்ற வசனங்கள் இன்னும் தமிழ் சினிமாவிலும் தமிழ் மக்கள் நெஞ்சங்களிலும் ஒலித்து கொண்டுதான் உள்ளது. அந்த வகையில் மிகவும் குறிப்பிடக்கூடிய வசனங்களை தற்போது பார்கலாம்…

பராசக்தி திரைப்படம்:
என்னோடு வயலுக்கு வந்தாயா.. நாற்று நட்டாயா.. அங்கு கொஞ்சி விளையாடும் எம்குலத்து பெண்களுக்கு மஞ்சள் அரைத்து பணி புரிந்தாயா? மானங்கெட்டவனே
பாசமலர்:
அண்ணன் தங்கை கதையாக அமைந்த இந்த படத்தில்
என் கண்ணையே உன்கிட்ட ஒப்படைக்கிறேன்.அதில் எப்பவும் நான் ஆனந்த கண்ணீர தான் பார்க்கனும்…
தெய்வ மகள்:
காக்கைக்கு கூட தன் குஞ்சு பொன் குஞ்சுனு சொல்லுவாங்கடி. அந்த காக்கையா நான் பிறந்து இருக்க கூடாதா!

தியாகம்:
எச்சை இலை மேலே பறந்தாலும் எச்சை இலை தால் கோபுரம் கீழே விழுந்தாலும் கோபுரம் தான்…
முதல் மாரியாதை :
அட கிருக்கு பயபுள்ள
இப்படி வசனங்களாலும் தமிழ் உச்சரிப்பாளும் தமிழ் சினிமாவின் தனிப்பெரும் அடையாளத்தை உருவாக்கிய இவர் தமிழ் மக்கள மனதில் ஆணி அடித்த மாதிரி சிம்மாசனத்தில் அமர்ந்துள்ளார். இன்றைக்கும் இவர் மாதிரியான நடிகரின் இடத்தை யாரும் பிடிக்கவில்லை. ரசிகர்களால் கொண்டாடப்படும் நவரச நாயகன், நடிகர் திலகம் சிவாஜி கணேசன் அவர்களின் நினைவு நாள் இன்று.
-பவானி கார்த்திக்

















