முன் ஜாமின் கோரி நடிகை கஸ்தூரி மனு…!! நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் அதிரடி…!!
கடந்த நவம்பர் 3ம் தேதி சென்னை எழும்பூர் ராஜரத்தினம் ஸ்டேடியத்தில் நடைப்பெற்ற கண்டன ஆர்ப்பாட்டத்தில் நடிகை கஸ்தூரி பங்கேற்றுள்ளார்., அப்போது அமரன் படத்தில் மேஜர் முகுந்த் தியாகராஜன் பிராமண சமூகத்தைச் சேர்ந்தவர் என்பதை மறைத்தது ஏன் என்றும் திராவிடம் குறித்தும், திமுக குறித்தும், பல்வேறு விமர்சனங்களை முன் வைத்து பேசியுள்ளார்.
மேலும் தெலுங்கு பேசும் மக்கள் குறித்து அவர் கொச்சையாகவும் அவதூறாகவும் பேசியுள்ளார்., இதனால் அவர் மீது புகார்களும் குற்றச்சாட்டுகளும் எழத் தொடங்கியது.. இதனால் நடிகை கஸ்தூரி மீது கடந்த நவம்பர் 5ம் தேதி 4 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது.,
அவர் நேரில் ஆஜராக வேண்டும் என காவல்துறையினர் சார்பில் சம்மன் அனுப்பியுள்ளனர். ஆனால் நடிகை கஸ்தூரி நேரில் ஆஜராகமல் தலைமறைவாகியுள்ளார். இதனால் தனிப்படை அமைத்து அவரை தேடும் பணி தீவிரமாக்கப்பட்டுள்ளது.. அவர் ஹைதராபாத் சென்றிருப்பதாக தகவல் கிடைத்துள்ள நிலையில் தனிப்படை காவலர்கள் இன்று ஹைதராபாத்திற்கு சென்று தேடும் பணியை தொடங்கியுள்ளனர்..
இந்நிலையில் நடிகை கஸ்தூரி முன் ஜாமின் கோரி மதுரை உயர்நீதிமன்றத்தில் மனு அளித்துள்ளார். அந்த மனுவை விசாரணை செய்த நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் இந்த வழக்கு குறித்து நாளை விசாரணை செய்ய இருப்பதாகவும்.. அப்படி முழுமையாக விசாரணை செய்த பின்னரே அடுத்த கட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என தெரிவித்துள்ளார்..