நகைச்சுவை நடிகரும் இயக்குனருமான மனோபாலா உடல்நலக் குறைவால் உயிரிழந்தார் அவருடைய உடலுக்கு தமிழ் திரைப்பட பிரபலங்கள் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
தமிழ் திரைப்பட உலகில் நகைச்சுவை நடிகரும் இயக்குனருமான மனோபாலா (69) உடல் நலக்குறைவால் இன்று மதியம் 1.00 அளவில் உயிரிழந்தார்
. இவர் 700 -க்கும் தமிழ் திரைப்படங்களில் நகைச்சுவை நடிகராக நடித்துள்ளார். மேலும் 20-க்கும் மேற்பட்ட படங்களை இயக்கியுள்ளார் என்பது குறிப்பிடதக்கது.
கடைசியாக லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடித்து வரும் லியோ படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். தளபதி 67 திரைப்படத்தின் அப்டேட் அவரது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்
நகைச்சுவை நடிகரும் இயக்குனருமான மனோபாலாவின் உயிரிழப்பு தமிழ் திரைப்பட உலகிற்கு பெரிய இழப்பாக உள்ளது என தமிழ் திரைப்பட பிரபலங்கள் தெரிவித்து வருகின்றனர்.
நாளை காலை 10 மணிக்கு வளசரவாக்கத்தில் உள்ள மின் மயானத்தில் அவரது இறுதிச்சடங்கு நடக்க உள்ளதாக மனோபாலாவின் மகன் ஹரிஷ் தெரிவித்துள்ளார்.
நடிகர் மனோபாலாவின் உடலுக்கு இயக்குநர்கள் மணிரத்னம், விக்ரமன், பேரரசு, ஹெச்.வினோத், ஏ.எல்.விஜய், சுசீந்திரன், ஒளிப்பதிவாளர் பி.சி.ஸ்ரீராம், நடிகர்கள் மோகன், ஆர்யா, தாமு, சிவக்குமார், சித்தார்த் உள்ளிட்ட பிரலகள் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.