விஜய் எடுத்த அதிரடி முடிவு… ஆச்சரியத்தில் கோலிவுட்..!
தளபதி விஜய் தற்போது தி கோட் திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தை முடித்துவிட்டு, எச்.வினோத் இயக்கத்தில் உருவாகும், அரசியல் த்ரில்லர் படத்தில், விஜய் நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது.
ஆனால், இப்படத்தின் தயாரிப்பாளர் யார் என்று இன்னும் உறுதி செய்யப்படவில்லை என்றும் சொல்லப்படுகிறது. இதற்கு காரணம் இந்த திரைப்படத்தில் நடிபபதற்கு விஜய் அதிகம் சம்பளம் கேட்பதாக ஒரு சிலர் சொல்கிறார்கள்.
வேறு சிலர், “தனது கடைசி திரைப்படம் என்பதால் ஒரு பெரிய பட்ஜெட்டை வாங்கி கொண்டு அரசியலுக்கு சென்று விடலாம் என விஜய் மனக்கணக்கு போட்டுள்ளார்”. எனவும் கூறுகின்றனர்.
அரசியலை மையமாக வைத்த கதையம்சங்களை கொண்ட திரைப்படமாக உருவாக இருப்பதால் இதில் , மிகவும் சர்ச்சையான சில காட்சிகள் அல்லது வசனங்கள் இடம்பெற வாய்ப்பு உள்ளது.
எனவே, அது படத்தை பாதிக்கும் என்பதால், தயாரிப்பாளர்கள் இப்படத்தை தயாரிக்க தயங்குகிறார்கள் என்று சொல்லப்படுகின்றது.
இவ்வாறு சிலர் ஒதுங்கிவிட்டதால், நடிகர் விஜயே, இப்படத்தை தயாரிக்க இருப்பதாக, தற்போது தகவல் கசிந்துள்ளது.
இந்த தகவல் கோலிவுட் வட்டாரத்தில் பலரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.
-பவானி கார்த்திக்