மின்கம்பத்தால் அதிகரித்த விபத்து..! அலட்சியம் காட்டி அதிகாரி..! அதிரடியில் இறங்கிய மக்கள்..!
சாலை நடுவே உள்ள மின்கம்பத்தால் ஏற்படும் விபத்துக்கள் மின்கம்பத்தை அகற்றக்கோரி மனுக்கள் கொடுத்தும் அகற்றாமல் அலட்சியம் காட்டி வரும் மின்துறை அதிகாரிகள். திரைப்படத்தில் வரும் அத்திப்பட்டி கிராமத்தை போல் மாநகராட்சி பகுதியில் எங்கள் ஏரியா இல்லை என கூறும் அதிகாரிகள். அப்பகுதி மக்கள் வேதனை குண்டும் குழியுமாக இருக்கும் சாலையை அவர்களது சொந்த செலவிலேயே சீரமைக்கும் பணி செய்து வருகின்றனர்.
வேலூர் மாவட்டம் விருதம்பட்டு அடுத்த கழிஞ்சூறில் உள்ள 13-வது உட்பட்ட மயூரா நகரில் நூற்றுக்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர் அந்த பகுதியை சேர்ந்த சாய்பாபா தெருவில் உள்ள 20 அடி ரோட்டின் நடுவில் மின்கம்பம் அமைக்கப்பட்டுள்ளது.
அதனை அப்புறப்படுத்தி சாலையோரம் வைத்து தரக் கோரி மின்துறை அதிகாரிகளுக்கும் மாநகராட்சிக்கும் பலமுறை மனுக்கள் கொடுக்கப்பட்டும் எந்த ஒரு நடவடிக்கும் எடுக்காமல் அலட்சியப் போக்கில் செயல்பட்டு வருகின்றனர்.
அந்த வழியாக இரவில் செல்லும் வாகன ஓட்டிகள், முதியவர்கள், கர்ப்பிணி பெண்கள், பள்ளி மாணவ மாணவிகள் செல்லும்போது கவனக்குறைவால் மீன் கம்பி மேல் மோதி விபத்து ஏற்படுகிறது.
அந்த விபத்தின் காரணமாக சிறுசிறு காயங்கள் ஏற்பட்டு சிரமப்பட்டு வருவதாகவும். உடல்நல குறைவால் 108 ஆம்புலன்ஸ்க்கு கால் செய்து வர வைத்தாலும் எங்கள் தெருவிற்கு நடுவே உள்ள மின்கம்பத்தால் 108 ஆம்புலன்ஸ் உள்ளே வர முடியாமல் வெளியே நிற்கும் சூழல் நிலவி வருகிறது.
அதன் காரணமாக நோயாளிகளை மருத்துவமனைக்கு அழைத்துச் செல்ல தாமதம் ஏற்படுகிறது. அவ்வழியாக கனரக வாகனங்கள் அதிக அளவு சென்று வரும் நிலையில் எதிர்பாராத விதமாக மின் கம்பத்தின் மேல் மோதி மின்கம்பம் கீழே விழுந்தால் அந்த தெரு முழுவதும் மின்சார கம்பிகள் பாய்ந்து உயிரிழப்பும் ஏற்படும் நிலை உள்ளது.
அதனால் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். அதேபோன்று எங்கள் பகுதிக்கு சாலை அமைத்து தரக் கோரி மாநகராட்சியிடம் கோரிக்கை வைத்தோம் ஆனால் மாநகராட்சி அதிகாரிகள் இந்தப் பகுதி மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதியில் சேரவில்லை என கூறுகின்றனர்.
நாங்கள் மாநகராட்சியிடம் அனுமதி பெற்று வீடு கட்டப்பட்டிருக்கிறோம் மாநகராட்சிக்கு வரி கட்டுகிறோம் ஆனால் எங்கள் பகுதி மாநகராட்சிக்கு சேரவில்லை என அதிகாரிகள் கூறுவது திரைப்படத்தில் வரும் அத்திப்பட்டி கிராமத்தை போல் எங்கள் பகுதியும் மாநகராட்சி பகுதியில் காணவில்லை என்பது எங்கள் மனம் வேதனை அளிக்கிறது.
இதனால் மாநகராட்சிக்கு வரவேண்டிய சலுகைகள் எதுவும் எங்களுக்கு வந்து சேர்வதில்லை அதனால் பாதாள சாக்கடை திட்டத்திற்காக தோண்டப்பட்ட சாலைகள் குண்டும் குழியுமாக இருப்பதை மாநகராட்சிக்கு பலமுறை கோரிக்கை வைத்தும் சீரமைக்க படாததால் மழைநீர் தேங்கி சேறும், சகதியுமாக குண்டும் குழியுமாக இருப்பதால் வருங்காலம் மழை காலம் என்பதாலும் தங்கள் பகுதியில் உள்ள சாலையை தாங்கள் சொந்த செலவிலேயே முரம்பு மண் கொட்டி ஜேசிபி இயந்திரம் மூலம் சாலையை சீரமைத்து வருகின்றோம்.
மாநகராட்சியிடம் எங்கள் பகுதியில் உள்ள சாலை சீரமைக்க கோரியும் மின் கம்பத்தை சாலையில் நடுவில் இருந்து அகற்றித்தரக்கோரியும் மாநகராட்சிக்கு மனுக்கள் கொடுத்திருக்கிறோம் மனுக்கள் மீது நடவடிக்கை எடுக்க விட்டால் சாலை மறியல் ஈடுபடுவதாக தெரிவிக்கின்றனர்.
– லோகேஸ்வரி.வெ