மீண்டும் ஆவின் பால் விலை உயர்வு..!! அதிர்ச்சியில் மக்கள்..!!
தமிழகத்தில் மீண்டும் உயர்ந்தது ஆவின் பால் விலை ஆகஸ்ட் மாதம் 12ம் தேதியில் இருந்து ஆவின் பாலின் விலை உயரும் என ஆவின் நிறுவனம் அறிவித்திருந்தது அதன் படி பச்சை நிற பால் லிட்டருக்கு 2.00 ரூபாய் உயர்ந்தது.
இந்த விலை உயர்வு மாற்றம் சென்னையை தவிர பிற மாவட்டங்களில் அதிகரித்தது.அதன் பின் ஆவின் பாலில் பச்சை நிற பால் பாக்கெட்டின் விலை லிட்டருக்கு 5 ரூபாய் அதிகரித்து இருப்பதாக வெளியான செய்தி குறித்து ஆவின் நிறுவனம் விளக்கம் அளித்தது.
தமிழ்நாடு பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு இணையம் மூலமாக சென்னை முழுவதும் நாள் ஒன்றுக்கு 15லட்சம் லிட்டர் பால் பொது மக்களிடம் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. ஆவின் நிறுவனத்தால் வழங்கப்பட்டு வருகின்ற பச்சை நிற பால் பொது மக்களுக்கு லிட்டருக்கு 44 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
ஆனால் வணிக நிறுவனத்திற்கு விற்பனை செய்யப்படும் பால் 5 லிட்டர் 210 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது எனவே மக்களுக்கு அது 42 ரூபாய்க்கு விற்கப்பட்டுள்ளது. வணிக நிறுவனதிற்கு 220 ரூபாய் ஆக மாற்றப்பட்டுள்ளது. அதாவது 44 ரூபாய்க்கு வணிக விற்பனையாளர்களுக்கு கொடுக்கப்பட்டுள்ளது.
மீண்டும் சென்னையை தவிர பிற மாவட்டங்களுக்கு ஆவின் பாலின் விலை லிட்டருக்கு 7% உயர்த்தப்பட்டு இருப்பதாக ஆவின் நிறுவனம் அறிவித்துள்ளது. இந்த விலைமாற்றம் பொது மக்கள் மற்றும் வியாபர்களிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.