பட்டினி இல்லா உலகம்..! தளபதி வெளியிட்ட அறிக்கை..! மே 28..?
நடிகரும் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவருமான விஜய் சினிமாவில் மட்டுமல்ல நிஜ வாழ்க்கையிலும் அவர் ஹீரோ என்றும் சொல்லும் அளவிற்கு பல்வேறு சிறப்பு திட்டங்களை செய்து வருகிறார்.
விஜய் மக்கள் இயக்கம் மூலம் இதுவரை பொதுமக்களுக்கு உதவி கொண்டிருந்த தளபதி விஜய்.., தற்போது மற்றொரு அசத்தல் அறிக்கையும் விட்டுள்ளார்.
தமிழக வெற்றிக் கழகத்தின் சார்பில் நாளை மறுநாள் அதவாது மே 28ம் தேதி அனைத்து சட்டமன்றத் தொகுதிகளிலும் பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்க தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் உத்தரவிட்டுள்ளார்.
அது குறித்த அறிக்கைகளை தமிழக வெற்றிக் கழகத்தின் பொது செயலாளர் என்.ஆனந்த் வெளியிட்டுள்ளார்..
அதில் குறிப்பிட்டுள்ளதாவது, வணக்கம், தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் தளபதி அவர்களின் அறிவுறுத்தலின்படி, பட்டினியில்லா உலகத்தை ஏற்படுத்த வேண்டும், அனைவருக்கும் உணவு கிடைத்திட வேண்டும் என்பதை வலியுறுத்தி, உலகப் பட்டினி தினமான மே 28ம் தேதி அன்று தமிழ்நாடு முழுவதும் அனைத்துச் சட்டமன்ற தொகுதிகளிலும் பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்குவதற்கான ஏற்பாடுகளைச் செய்ய வேண்டும்.
மாவட்ட, அணி, நகரம், ஒன்றியம், கிளை, மற்றும் சட்டமன்றத் தொகுதி நிர்வாகிகள் உள்ளிட்ட அனைவரும் உரிய தேர்தல் வழிகாட்டும் விதிமுறைகளைப் பின்பற்றிப் பொது மக்களுக்கு அன்னதானம் வழங்கி, மக்கள் நலப்பணியில் ஈடுபடுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன். என இவ்வாறே அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
– லோகேஸ்வரி.வெ