திருவண்ணாமலையில் கொக்கு கறி சாப்பிட்ட மாணவி பலமுறை விக்கல் எடுத்து மரணமடைந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி அருகே பொன்னாங்குளம் கிராமத்தைச் சேர்ந்தவர் ராஜவேல், ஜெயலட்சுமி தம்பதியின் மகள் அஸ்வினி, 18 வயதான இவர் சென்னை மயிலாப்பூரில் உள்ள டிப்ளமோ நர்சிங் கல்லூரியில் படித்து வந்துள்ளார்.
கடந்த 14ம் தேதி வயலுக்குச் சென்ற ராஜவேல், வயல் சேற்றில் கிடந்த கொக்கு ஒன்றை எடுத்து வந்துள்ளார். பின்னர் அதை சமைத்து தனது மகளுக்கு கொடுத்துள்ளார். அதனை வாங்கி சாப்பிட்ட மஞ்சுக்கு திடீரென விக்கல் ஏற்பட்டுள்ளது.
பின்னர், மேல் சிகிச்சைக்காக சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி அஸ்வினி நேற்று முன்தினம் பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து அவரது தாய் ஜெயலட்சுமி கீழ்கொடுங்காலூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் சப்- இன்ஸ்பெக்டர் கோவிந்தராஜூலு வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
















