மீண்டும் ஒரு அதிர்ச்சி.. கள்ளச்சாரயம் குடித்த ஒருவர் பலி..!
சமீபத்தில் கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் அருந்தி 65க்கும் மேற்பட்டோர் உயிரிழந்த சம்பவம் தமிழகத்தை உலுக்கிய நிலையில் தற்போது மீண்டும் நடந்திருப்பது பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது.
அதாவது விழுப்புரம் மாவட்டம் திருவெண்ணெய்நல்லூர் அருகே உள்ள டி.குமாரமங்கலம் கிராமத்தில் கடந்த 4 நாட்களுக்கு முன்பு விற்கப்பட்ட கள்ளச் சாராயத்தை குடித்த உள்ளூரைச் சேர்ந்த ஜெயராமன் (65) மற்றும் 2 பேர் உடல் நலம் பாதிக்கப்பட்டு முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இதில் ஜெயராமன் என்பவர் இன்று (ஜூலை 4) அதிகாலை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அவரின் உடல் காலை 10 மணிக்கு பிரேதப் பரிசோதனை செய்யப்பட்டு உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.
-பவானி கார்த்திக்