சமூண்டீஸ்வரி அம்மனுக்கு கத்தி வெட்டு நேர்த்திகடான..?
பொதுவாக தெய்வங்களுக்கு நேர்த்தி கடன் செலுத்துவது வழக்கம்., அதாவது வேல் குற்றுவது, பால்குடம், தீச்சட்டி, முளைப்பாரி, எடுப்பது, முடி காணிக்கை செலுத்துவது போன்ற நேர்த்திகடன்கள் செலுத்துவார்கள்.
ஆனால் சாமுண்டிஸ்வரி அம்மனுக்கு மட்டும் கத்தியால் வெட்டிக்கொண்டு நேர்த்திகடன் செலுத்துவதை இந்த ஊர் மக்கள் வழக்கமாக வைத்திருக்கின்றனர்.
அப்படி கத்தியால் வெட்டிகொண்டு நேர்த்திகடன் செலுத்துவதற்கான காரணம் என்ன தெரியுமா..? தெரிந்துக்கொள்ள இங்கே படியுங்கள்.
பல நூற்றாண்டுக்கு முன்னர் இந்த கிராமத்தில் சாமுண்டிஸ்வரி அம்மன் அந்த ஊரில் இருந்த நோய்களை விரட்டுவதற்காக ஒரு பெண்மணியாக வந்து சில கிராம மக்களின் முன் வந்து.., சில பூஜைகளை ஒரு குளத்தின் அருகே செய்து கொண்டிருந்தார்.., செய்து முடித்ததும் கிராம மக்களை திரும்பி பார்க்காமல் ஊருக்குள் செல்ல ஆணையிட்டார்,
அந்த கிராம மக்களும் அம்மனின் பேச்சை மீறி குளத்தில் இறங்கும் பொழுது பார்த்து விடுவார்கள்.. அப்பொழுது அம்மன் கோபம் உச்சத்திற்கு சென்று விட, நான் உங்களை திரும்பி பார்க்காமல் தானே செல்ல சொன்னேன்.., என் பேச்சை மீறி என் கோபத்திற்கு ஆளாகிவிட்டிர்கள் என அம்மன் சொன்னவுடன் கிராம மக்கள் அனைவரும்.., அம்மனின் காலில் விழுந்து நாங்கள் செய்த தவறுக்கு நாங்களே தண்டனை கொடுத்து கொள்கிறோம் அம்மா..,
எங்கள் சங்கதிகள் பாதிக்க வேண்டாம் என சொல்லி கொண்டே ஒரு கத்தியை எடுத்து உடலில் ஆங்காங்கே வெட்டி கொண்டு ரத்தத்தை காணிக்கையாக கொடுத்து.., இனி எங்கள் சங்கதிகளும் இதை செய்வார்கள்.. அம்மா எந்த உயிரும் கொள்ளப்பட வேண்டாம் என கேட்டுக்கொண்ட பின்னரே அம்மனின் கோவம் தணிந்துள்ளது.
எனவே இந்த கத்தி வெட்டு பழக்கம் அன்று முதல் இன்று வரை பின் பற்றப்பட்டு வருகிறது. ஆனால் இந்த கத்தி வெட்டு காயத்திற்கு அந்த ஊர் மக்கள் மஞ்சள்பத்தை மட்டும் வைத்தியமாக வைத்துள்ளனர்.
இந்த பழக்கத்தை.., பெரியவர்கள் மட்டுமின்றி சிறு குழந்தைகளும் இந்த நேர்த்திகடனை பின் பற்றி வருவது குறிப்பிட தக்கது.
மேலும் இதுபோன்ற பல ஆன்மீக தகவல்கள் பற்றி தெரிந்துகொள்ள தொடர்ந்து படித்திடுங்கள்.
சிறுகதைகள் – 75 | தொடர் கதை – 2 | கிரைம்- 572 + | கவிதைகள் – 150 + | எழுத்தாளர் – 4000 + | ஆன்மிகம் தொகுப்பாளர்
நம்மை வீழ்த்தியவர்கள் முன் ஜெயிக்க வேண்டுமே.. தவிர அடுத்தவர்களை வீழ்த்தி ஜெயிக்க கூடாது..