சென்னை ஹாரிங்கடன் சாலையில் ஏடிஎம்மில் பணம் நிரப்பி கொண்டு இருந்த போது காவலாளியின் கையில் வைத்திருந்த துப்பாக்கி துடைத்து கொண்டு இருந்த போது வெடித்து அவரின் வயிற்றிலே தோட்டா பாய்ந்த சம்பவம் சென்னையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
சென்னை ஹாரிங்கடன் சாலையில் உள்ள ஏழாவது அவென்யூவில் தனியார் வங்கி ஏடிஎம் இயங்கி வருகிறது.இதில் தனியார் நிறுவனம் மூலம் பணம் நிரப்பும் பணியானது இன்று காலை நடைபெற்று உள்ளது. அப்போது அதில் பணம் நிரப்பும் நிறுவனத்தின் கன்மேனாக வந்த நபர் துப்பாக்கியை துடைத்து விட்டு அருகில் வைக்கும் போது திடீரென வெடித்துள்ளது.
அப்போது இதிலிருந்து வெளியேறிய தோட்டா கண்மேன் இடது பக்கம் வயிற்றில் பாய்ந்து உள்ளது இதில் ரத்த வெள்ளத்தில் அவர் அங்கே மழங்கி விழுந்துள்ளார். இதனால் அதிர்ச்சடைந்த சக ஊழியர்கள் ஏடிஎம்மில் பணம் நிரப்புவதை நிறுத்திவிட்டு அவர்கள் வந்த வாகனத்திலேயே அவரை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று அனுமதித்துள்ளனர். அங்கு மருத்துவர்கள் சிடி ஸ்கேன் எடுத்து வயிற்றில் பாய்ந்த தோட்டாவை வெளியேற்றும் பணியில் ஈடுபட்டு சிகிச்சை அளித்து வருகின்றனர்.
இந்த நிலையில் இது குறித்த தகவல் அறிந்த சேத்துப்பட்டு போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று துப்பாக்கியை பறிமுதல் செய்து ஆய்வு செய்தனர். அதன் பிறகு இது குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
முதற்கட்ட விசாரணையில் துப்பாக்கி குண்டு பாய்ந்து காயப்பட்டவர் பீகார் மாநிலத்தைச் சேர்ந்த ரானாகுமார்(30) என்பது இவர் சென்னையில் தங்கி தனியார் வங்கி ஏடிஎம்களில் பணம் நிரப்பும் நிறுவனத்தில் கன்மேனகா பணியாற்றி வருவதும் தெரியவந்துள்ளது.
மேலும் இவர் நுங்கம்பாக்கத்தில் உள்ள ஸ்டார் செக்யூரிட்டி சர்வீஸ் நிறுவனத்தின் மூலம் கன்மேனாக பணியில் சேர்ந்து உள்ளார் என்பதும், இவர் இன்று காலை வழக்கமான பணியில் இருந்த போது டபுள் பேரல் எனப்படும் துப்பாக்கி சுத்தம் செய்யும் போது வெடித்து அவரது வயிற்றில் தோட்டா பாய்ந்து உள்ளதும் தெரியவந்தது.
மேலும் ராணா குமாருக்கு முறையாக துப்பாக்கியை கையாளும் பஅயிற்சி உள்ளதா என்பது குறித்தும் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.