பிறந்த 38 நாள் பச்சிளம் குழந்தை உயிரிழப்பு..! பின்னணியில் காத்திருந்த அதிர்ச்சி..!
அரியலூர் மாவட்டம் உட்கோட்டை வெள்ளாளர் தெருவை சேர்ந்தவர் வீரமுத்து ரேவதி தம்பதி. இவர்களின் மகள் சங்கீதாவை கும்பகோணம் அருகே உள்ள சுந்தரபெருமாள் கோயில் வடக்கு வீதி பாலமுருகன் என்பவருக்கு திருமணம் செய்து கொடுத்துள்ளனர்.
இவர்களுக்கு பிறந்து 38 நாட்களேயான ஆண் குழந்தை உள்ளது.
இந்நிலையில் சங்கீதா தனது பெற்றோர் ஊரான உட்கோட்டையில் தனது பெற்றோர்களுடன் இருந்து வந்த நிலையில் அதிகாலையில் தனது குழந்தைக்கு பால் கொடுத்து தூங்க வைத்துள்ளார்.
இந்நிலையில் காலையில் எழுந்து பார்த்த போது தனது அருகில் படுத்திருந்த குழந்தை காணாததை கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளார்.
பிறகு அக்கம் பக்கத்தில் தேடியும் பார்த்துள்ளனர். எங்கு தேடியும் குழந்தை கிடைக்கவில்லை இதனையடுத்து வீட்டுக்கு பின்புறம் பார்த்த போது அங்கு இருந்த தண்ணீர் பேரலில் போர்வையுடன் குழந்தையை மூழ்கடிக்கப்பட்டு இறந்த நிலையில் கிடந்துள்ளது.
இதனைகண்டு அதிர்ச்சி அடைந்த தாய் சங்கீதா கதறி அழுதுள்ளார்.
இதையடுத்து ஜெயங்கொண்டம் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு சம்பவ இடத்திற்கு சென்று சிசுவின் உடலை மீட்டு ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி விட்டு குழந்தையின் இறப்பு குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
பிறந்து 38 நாட்களேயான ஆண் சிசு தண்ணீர் பேரலில் மூழ்கடிக்கப்பட்டு கொலை செய்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
இதுகுறித்துகுழந்தையின்தாத்தாபாட்டியானவீரமுத்துரேவதியிடம்போலீசார்விசாரணைசெய்துவருகின்றனர்.