கிருஷ்ணா கால்வாயில் தவறி விழுந்து 3 வயது குழந்தை உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை உருவாக்கியுள்ளது.
திருவள்ளூர் அடுத்த தண்ணீர்குளம் ஆலந்தூர் பகுதியைச் சேர்ந்த அருள் மனைவி கவிதா இருவரும் கிருஷ்ணா கால்வாயில் இறங்கி குளித்துக் கொண்டிருந்தபோது கரையில் இருந்த 3 வயது ஆண் குழந்தை அப்பு கிருஷ்ணா கால்வாயில் தவறி விழுந்து உயிரிழப்பு
திருவள்ளூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பிரேத பரிசோதனைக்காக குழந்தை அப்புவின் உடலை அனுப்பி வைத்து சம்பவம் குறித்து செவ்வாப்பேட்டை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.