திருவள்ளூர் அருகே 24 வயதுடைய இளம் உடற்பயிற்சியாளருக்கு திடீர் மாரடைப்பு ஏற்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
திருவள்ளூர் அடுத்த திருப்பாச்சூர் பெரிய காலனி அம்பேத்கர் நகர் பகுதியைச் சேர்ந்த கூலி தொழிலாளிகளான வெங்கடேசன் – லதா இவர்களுக்கு 24 வயதான அஜித் என்ற மோகன்தாஸ் ,பாலாஜி (22) என்ற இரண்டு மகன்கள் இருந்து வருகின்றனர்.
இதில் மூத்த மகனான அஜித் என்ற மோகன்தாஸ் இளங்கலைப் பட்டம் படித்து முடித்து பின்னர் கடம்பத்தூர் பகுதியில் ஆசிரியர் பயிற்சியும் முடித்துள்ளார்.
இளைய மகன் பாலாஜி என்பவர் படித்து முடித்து திருவள்ளூர் அடுத்த காக்களூர் தொழிற்பேட்டையில் உள்ள தனியார் தொழிற்சாலையில் பணியாற்றி வருகிறார்.
அஜித் என்ற மோகன்தாஸ் திருவள்ளூர் அடுத்த மேல்நல்லத்தூர் பகுதியில் உள்ள கனரக வாகனம் தயாரிக்கும் தொழிற்சாலையின் உதிரி பாகம் தயாரிக்கும் தொழிற்சாலையில் ஒப்பந்த பணியாளராக பணியாற்றி வருகிறார் .
தொழிற்சாலையில் பணி முடிந்த பிறகு தினந்தோறும் அவர் காலை மாலை என கடந்த 7 மாதங்களாக திருவள்ளூர் பகுதியில் உள்ள உடற்பயிற்சி மையத்தில் சென்று உடற்பயிற்சி செய்து வந்துள்ளார்.
அப்போது உடற்பயிற்சிக்கு தேவையான உணவை உடற்பயிற்சி கூடத்தில் கொடுத்த உணவை தினந்தோறும் அவர் எடுத்துக் கொண்டதாக கூறப்படுகிறது.
இந்நிலையில் கடந்த மூன்று மாதங்களாக முறையாக உடற்பயிற்சி செய்யாமல் தவிர்த்து வேலைக்கு சென்று வந்ததாக கூறப்படுகிறது.
இந்நிலையில் இன்று காலை வழக்கமாக வீட்டில் இருந்த அவருக்கு லேசான நெஞ்சு வலி ஏற்பட்டுள்ளது.
பின்னர் அவர் குடும்பத்தினர் அவரை திருவள்ளூரில் உள்ள அரசு பொது மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளனர்.
அங்கு மருத்துவமனைக்கு சென்ற அவருக்கு மேலும் மாரடைப்பு தீவிரம் அடைந்துள்ளது.
சுயநினைவு இழைக்க தொடங்கிய அவருக்கு தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு ஆக்சிஜன் கொடுத்து சிகிச்சியானது கொடுக்கப்பட்டது. ஆனால் சிகிச்சை பலனளிக்காமல் உயிரிழந்தார்.
இவர் முதல் கட்ட கொரோனா தடுப்பூசி மட்டும் எடுத்துக்கொண்டு இருப்பதாக கூறப்படுகிறது. தொடர்ச்சியாக நாட்டில் அதிக அளவில் உடற்பயிற்சி கூடத்தில் உடற்பயிற்சி மேற்கொள்ளும் பயிற்சியாளர்கள் விளையாட்டு பயிற்சியாளர்கள் திடீரென்று மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழப்பது அதிகரித்து வருகிறது.
அந்த வகையில் திருவள்ளூர் பகுதியைச் சேர்ந்த 24 வயதுடைய இளம் உடற்பயிற்சியளர் மாரடைப்பு ஏற்பட்டு சிகிச்சை பலனின்றி பலியான சம்பவம் உடற்பயிற்சியாளர்கள் இடையே அச்சத்தையும் பதட்டத்தையும் ஏற்படுத்தி உள்ளது.
திருமணமாகாத இளம் உடற்பயிற்சியாளர் திடீர் மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்த சம்பவம் சொந்த கிராமம் சோகத்தில் மூழ்கியுள்ளது.
















