மே 23 முதல் பேருந்து பயணிகளிடம் ரூ.2000 நோட்டுகளை வாங்க வேண்டாம் என போக்குவரத்துறை அறிவுறுத்தியுள்ளது.
பயணிகளிடம் பக்குவமாக எடுத்துரைத்து ரூ.2000 நோட்டுகளை வாங்குவதை தவிர்க்க வேண்டும் என அரசு பேருந்து நடத்துநர்களுக்கு தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் அறிவுறுத்தியுள்ளது.
இதுகுறித்து தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் சார்பில் அனுப்பப்பட்டுள்ள சுற்றறிக்கையில், இந்திய ரீசர்வ் வங்கி 18.05.2023 தேதிய அறிக்கையில் ரூபாய 2000 இந்திய நோட்டுகளை புழக்கத்தில் இருந்து திரும்பப் பெறும் முடிவை அறிவித்துள்ளது.இருப்பினும் ரூபாய் 2000 இந்திய நோட்டுகள் சட்டபூர்யமான டெண்டராக இருக்கும், மேலும் 30 செட்டம்பர் 2003 தேதி வரை வங்கியில் மாற்றிக் கொள்ளலாம் என்றும் இந்திய ரிசர்ன் வங்கி தெரிவித்துள்ளது.
மேலும் ஒரு நாளைக்கு ஒரு நபர் அதிகபட்சமாக ரூ.20,000/- aரை வங்கியில் வரவு வைக்க முடியும் அல்லது மாற்றிக் கொள்ள முடியும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன் காரணமாக 2000 ரூபாய் நோட்டுகளை கழகத்தால் வங்கியில் செலுத்த இயலாத நிலை உள்ளதால், 23.06.2023 ஆம் தேதி முதல் நடத்துனர்கள் அனைவரும் பயணிகளுக்கு இடையூறு எற்படாவண்ணம் பக்குவமாக எடுத்துரைத்து 2000 ரூபாய் நோட்டுகளை வழித்தடத்தில் வாங்குவதை தவிர்க்கும்படி கேட்டுக் கொள்ளப்படுகிறது.
மேலும் வசூல் தொகையை பிரிடம் மாற்றம் செய்வதையும் தவிர்க்கும்படி தகுந்த அறிவுரை வழங்குமாறு பொது மேலாளர் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். மற்றும் அனைத்து கிளை மேனர்களும்
மேலும், தினசரி ஒவ்வொரு கிளையிலும் நடத்துளர்களால் செலுத்தப்பட்ட வகல் தொகையில் 2000 ரூபாய் நோட்டுகள் எண்ணிக்கை குறித்த விபரங்கள் மண்டய கணக்கு பிரிவு வாயிலாக மத்திய கணக்கு பிரிவிற்கு தெரியப்படுத்த அறிவுறுத்தப்படுகிறது” எனக்குறிப்பிடப்பட்டுள்ளது.