ரயிலில் கேட்பாரற்று கிடந்த 5 கிலோ கஞ்சா பொட்டலங்களை கைப்பற்றி ரயில்வே போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
மேற்கு வங்கத்தில் இருந்து கேரளா செல்லும் சாலிமர் விரைவு ரயிலில் ஈரோடு ரயில்வே இருப்புபாதை போலீசார் சோதனை நடத்தினர்.அப்போது பயணிகள் இருக்கைக்கு அடியில் பொட்டலம் ஒன்று கிடப்பதை கண்டு அதனை பிரித்து பார்த்தபோது கஞ்சா பொட்டலம் என்பது தெரிய வந்தது.
5 கிலோ எடை கொண்ட கஞ்சா பொட்டலத்தை மீட்ட போலீசார் அதனை கடத்தி வந்த நபர் குறித்த விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் ஈரோடு வழியாக செல்லும் ரயில்களில் போலீசார் தொடர்ந்து தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.
















