மத நல்லிணக்கத்தை கெடுக்கும் புர்கா,பர்ஹானா, தி கேரளா ஸ்டோரி உள்ளிட்டா படங்களை தடை செய்ய வலியுறுத்தி தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தினர் கொட்டும் மழையில் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
அண்மையில் வெளியான தி கேரளா ஸ்டோரி என்ற திரைப்படத்திற்கு கடும் எதிர்ப்புகள் எழுந்தன. தமிழ்நாட்டில் பல்வேறு இடங்களில் பல்வேறு இஸ்லாமிய அமைப்பினர், அரசியல் கட்சியினர் திரைப்படத்தை தடை செய்ய வலியுறுத்தி ஆர்ப்பாட்டங்களை மேற்கொண்டனர். கோவையில் அத்திரைப்படம் வெளியான அனைத்து திரையரங்குகள் முன்பும் கண்டன ஆர்ப்பாட்டம், திரையரங்கு முற்றுகை ஆகியவை நடைபெற்றது.
அதன் தொடர்ச்சியாக கோவை தெற்கு வட்டாட்சியர் அலுவலகம் முன்பு கோவை மாநகர் மாவட்ட தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் மத நல்லிணக்கத்தை கெடுக்கும் வகையில் உள்ள புர்கா, பர்ஹானா, தி கேரளா ஸ்டோரி உள்ளிட்ட படங்களை தடை செய்ய வலியுறுத்தி கண்டனம் முழக்கங்கள் எழுப்பப்பட்டன.
கொட்டும் மழையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் பெண்கள் உட்பட 500க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர். சமீப காலம வேண்டுமென்ற திரைப்படங்கள் மூலம் வன்முறையை தூண்ட முயல்வதாகவும், காஷ்மீர் பெய்ஸ் படத்திற்கு, கட்சியினர் பார்க்க சொன்னார்கள், வரி விலக்கு அளித்தார்கள், இப்போது கேரளா ஸ்டோரி படத்திற்கு பிரதமர் மோடி வரவேற்று பேசுகிறார்.
இவர் பிரதமராக இல்லாமல் ஒரு படத்தின் விநியோகஸ்தர் போல நடந்து கொள்கிறார் என தெரிவித்தனர். மேலும் இனி வர உள்ள பர்ஹான திரைப்படத்தில் இஸ்லாமியர்களை புன்படுத்தும் படி படங்கள் வந்தால் கடுமையான போராட்டம் நடைபெறும் என தெரிவித்தனர்.

















