பழனியில் நேற்று முன்தினம் ரவுடி வடிவேலை கொலை செய்த வழக்கில் இருவரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
பழனி அடிவாரம் குறும்பபட்டியைச் சேர்ந்த வடிவேலு வயது 29, இவர் மீது பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ள நிலையில் வடிவேல் சில ஆண்டுகளாக திருப்பூர் தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வந்ததார். இந்நிலையில் கடந்த ஒன்றாம் தேதி மே தின விடுமுறையும் ஒட்டி பழனி வந்த வடிவேலு, நேற்று முன்தினம் பழனி பேருந்து நிலையம் அருகே நின்று கொண்டிருந்தபோது மர்ம நபர்கள் இருவர் ஆயுதங்களுடன் வந்து சரமாரியாக வடிவேலுவை வெட்டினர்.
படுகாயமடைந்த வடிவேல் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இது குறித்து பழனி நகர போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். போலீஸார் விசாரணையில் பழனி குரும்பபட்டியை சேர்ந்த மாரிமுத்து மற்றும் அழகாபுரியை சேர்ந்த சுரேஷ் இருவரிடம் இருந்து ஆயுதங்களை கைபற்றி வழக்கு பதிவு செய்தனர். இருவரையும் பழனி நீதிமன்றத்தில் ஆஜர் படுத்திய போலீஸார் சிறையில் அடைத்தனர்.
போலீசாரின் விசாரணையில் கொலையான வடிவேலு மற்றும் கொலை செய்த மாரிமுத்து, சுரேஷ் மூவரும் நண்பர்கள் என்பதும், கடந்த சில தினங்களுக்கு முன்பு மூவரும் மது அருந்திய போது வடிவேலு, சுரேஷை பாட்டிலால் தாக்கி காயப்படுத்தியதுள்ளான்.
இதனால் கோபத்தில் இருந்து சுரேஷ் சம்பம் நடந்தபோது வடிவேலுவை தாக்குவதற்காக போதையில் வந்துள்ளான். போதை தலைக்கேறி கடுமையாக வெட்டியதில் கூட்டாளியான வடிவேலு பலத்த காயம் அடைந்து உயிரிழந்ததும் தெரிய வந்துள்ளது. வடிவேலு, மாரிமுத்து, சுரேஷ் உள்ளிட்டோர் இணைந்து அடிதடி, கொலை முயற்சி, வழிப்பறி உள்ளிட்ட குற்ற சம்பவங்களில் ஈடுபட்டுள்ளனர்.
சமீப காலமாக வடிவேலு வெளியூருக்கு வேலைக்கு சென்று விட்டு மாரிமுத்து, சுரேஷ் தொடர்பு இல்லாமல் இருந்ததால் அந்தக் கோபத்தையும் வைத்து வடிவேலுவை கொலை செய்தது போலீசாருக்கு தெரியவந்துள்ளது. பிரிந்து சென்ற கூட்டாளியை வெட்டிக்கொன்ற சம்பவம் பழனியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
















