முன்னணி நடிகராக வலம் வந்த வெங்கட்பிரபு, முதன் முறையாக மிர்ச்சி சிவா,விஜய் வசந்த், ஜெய், ஆகிய பல பிரபலங்களைக் கொண்டு இயக்கிய சென்னை600028 திரைப்படம் சூப்பர் ஹிட் வெற்றி பெற்றது. அதனைத்தொடர்ந்து தல அஜித்தை நெகட்டீவ் ரோலில் நடிக்க வைத்து மங்காத்தா என்ற சூப்பர் டூப்பர் படத்தை கொடுத்தார்.
கடந்த ஆண்டு 2020 ஆம் ஆண்டு நடிகர் சிம்புவை வைத்து வெங்கட் பிரபு இயக்கிய, மாநாடு திரைப்படம் தான். இப்படம் வெளியாகி சுமார் 100 கோடி வரை வசூலை வாரி குவித்தது. இந்த படத்தின் வெற்றியை தொடர்ந்து, இயக்குனர் வெங்கட் பிரபு… தமிழ் – தெலுங்கு என இருமொழிகளில், நாக சைதன்யா நடிப்பில் உருவாகி வரும் ‘கஸ்டடி’ திரைப்படத்தை வெங்கட்பிரபு இயக்கி முடித்துள்ளார்.
இந்த படத்தில் நடிகர் நாக சைதன்யாவுக்கு ஜோடியாக, கீர்த்தி ஷெட்டி நடித்துள்ளார். அரவிந்த் சுவாமி வில்லனாக நடிக்க, ப்ரியாமணி, சரத்குமார், சம்பத்ராஜ், ப்ரேம்ஜி, வெண்ணிலா கிஷோர், ப்ரேமி விஷ்வநாத் மற்றும் பலர் நடிக்கின்றனர்.
இந்த ஆண்டு மே 12, ஆம் தேதி இப்படம் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், இந்த படத்தின் வித்தியாசமான புரோமோ ஒன்றை வெளியிட்டு, ஃபர்ஸ்ட் சிங்கிள் பாடல் வரும் 10.4.2023 அன்று வெளியாகும் என தெரிவித்துள்ளனர். இந்த வித்தியாசமான புரோமோஷன் வீடியோ, சமூக வலைத்தளத்தில் வெளியாகி வைரலாக பார்க்கப்பட்டு வருகிறது.

















