புதுச்சேரி பாண்லே பால் பொருட்களின் விலை அதிரடியாக உயர்வு..!! அமலுக்கு வந்த தகவல்..?
புதுச்சேரி அரசின் பாண்லே நிறுவனத்தின் பால் பொருட்களின் விலை 1 ரூபாய் முதல் 70 வரை திடீரென உயர்த்தப்பட்டுள்ளது. இந்த விலை உயர்வு நாளை முதல் அமலுக்கு வரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
புதுச்சேரி மாநிலத்தில் அரசின் சார்பு நிறுவனமாக செயல்பட்டு வரும் “பாண்லே நிறுவனம்” மிகவும் புகழ்பெற்ற நிறுவனம் என்று சொல்லலாம். இங்கு பால், தயிர், நெய், மோர், பன்னீர், ஐஸ்கிரீம் உள்ளிட்ட பல்வேறு பால் சார்ந்த பொருட்கள் உற்பத்தி செய்யப்பட்டு மாநிலம் முழுதும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
இதன் சுவை, தரம் காரணமாக பாண்லே பொருட்களுக்கு மக்களிடையே அதிக வரவேற்பு உள்ளது. என்று சொல்லலாம். இந்நிலையில் பாண்லே ஐஸ்கிரீம், குல்பி பொருட்களில் விலை நாளை முதல் உயர்த்தப்படுவதாக பாண்லே நிர்வாகம் அறிவித்துள்ளது.
அதன்படி குறைந்தபட்சம் ரூ1 முதல் அதிகபட்சம் ரூ. 70 வரை உயர்த்தப்படுகிறது. குறிப்பாக ரூ. 7-க்கு விற்கப்பட்ட வெண்ணிலா ஐஸ்கிரீம் ரூ8-கவும், ரூ.35-க்கு விற்கப்பட்ட குல்பி ரூ.40-கவும், பட்டர் ஸ்காட்ஸ் 90 எம்எல் ரூ. 25-ல் இருந்து ரூ. 30- ஆகவும், 500 எம்எல் வென்னிலா ஐஸ்கிரீம் ரூ.100-ல் இருந்து ரூ.120-ல் ஆகவும், 1 லிட்டர் பட்டர் ஸ்காட்ச் ஐஸ்கிரீம் ரூ. 180-ல் இருந்து ரூ. 250 என அதிகபட்சமாக ரூபாய் 70 வரை விலை உயர்த்தப்பட்டுள்ளது.
இந்த திடீர் விலை உயர்வு பொதுமக்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.