பிரிவுக்கான காரணம் இதுதான்…!! சாய்ராபானு உருக்க பதிவு…!!
இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மானை அவரது மனைவி சாய்ராபானு விவாகரத்து செய்யவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ள நிலையில் அவரது மகன் வெளியிட்டுள்ள பதிவு ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது..
கடந்த சில மாதங்களாகவே பிரபல சினிமா தம்பதிகளின் விவாகரத்து செய்தி இணையத்தில் அடுத்தடுத்து வெளியாகி கொண்டே வருகிறது.. காதலித்து திருமணம் செய்து கொண்ட தம்பதிகள் கூட கருத்து வேறுபாடு காரணமாக பிரிவதாக தெரிவித்து வருகின்றனர்., தனுஷ் ஐஸ்வர்யா, ஜெயம்ரவி ஆர்த்தி, இவர்கள் விவாகரத்து செய்தியே பார்த்து வந்தோம்
கடந்த 1995ஆம் ஆண்டு ஏ.ஆர்.ரஹ்மான் – சாய்ரா பானு இவர்களுக்கு திருமணம் நடைபெற்றது. இவர்களுக்கு கதீஜா, ரஹீமா மற்றும் அமீன் என மூன்று பிள்ளைகள் இருக்கின்றனர். இந்நிலையில் பிரபல இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான், சாய்ரா பானுவின் விவாகரத்து ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது..
இது குறித்து சாய்ரா பானு அவர்களின் வழக்கறிஞர் வந்தனா ஷா எக்ஸ் தளப்பதிவில் குறிப்பிட்டிருப்பதாவது. எங்களுடைய திருமண வாழ்க்கை 30 ஆண்டுகளை கடக்கும் என நினைத்து இருந்தோம், ஆனால் 29 ஆண்டுகால திருமண வாழ்க்கைக்கு பிறகு இந்த ஒரு முடிவை எடுத்து உள்ளோம்.,
எங்களுடைய அழகான உறவில் ஏற்பட்ட சில கசப்பான விஷயங்களே இந்த முடிவிற்கு காரணம்., ஒரு சில விஷயங்களுக்கு முடிவு என்பதும் இல்லை., அதை தீர்ப்பதற்கான வழிகளும் இல்லை எங்கள் இருவருக்கும் இடையே ஏற்பட்டுள்ள இந்த விரிசலை சரிசெய்வது என்பது முடியாத ஒன்று., மன வேதனையுடன் எடுத்த இந்த முடிவே இறுதியானது என சாய்ரா பானு கூறியதாக அவரது வழக்கறிஞர் வந்தனா ஷா பதிவிட்டுள்ளார்.
தன்னுடைய தாய் வாழ்க்கையில் இந்த கடினமான அத்தியாத்தை கடக்கும் இந்த நேரத்தில் அவர்களது பிரைவசிக்கு இடம் கொடுக்க வேண்டுமென அவரது மகன் அமீன் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்..