உலகின் மிக சிறந்த இசையமைப்பாளர்களில் ஒருவரான இசைப்புயல் ஏ.ஆர். ரஹ்மானின் 57 வது பிறந்த நாளை உலகம் முழுவதும் உள்ள இசை ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.
1992ல் ரோஜா என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவின் இசை இயக்குனராக அறிமுகமானார். தனது முதல் படத்திலேயே இதுவரை யாரும் கேட்டிராத ஒரு இசையின் மோளம் அனைவரையும் திரும்பி பார்க்கவைத்தார். அதனை தொடர்ந்து, அவர் மெட்டு போட்டாலே ஹிட் என்ற அளவிக்ரு அவரின் இசையின் தரங்கள் அனைவரிடமும் பெரும் வரவேற்பை பெற்றது. தமிழ் மட்டுமின்றி ஹிந்தியிலும் பெரும் வரவேற்பை பெற்றார். இதுவரை தமிழ் சினிமாவிலிருந்து ஹிந்தியில் யாரும் கண்டிராதா உச்சத்தை எட்டினார். தனக்கான ஒரு இடத்தியும் உருவாக்கினார்.

பொதுவாக அமைதியான குணாதிசயத்தை கொண்ட ஏ.ஆர்.ரஹ்மான் தனக்கான உடல்மொழி மற்றும் பேசு மொழியில் அவரை நோக்கி வரும் விமர்சனகளுக்கு எதிராக பல சம்பவங்களை செய்து வருகிறார். ஹிந்தி சினிமாவின் முக்கிய நடிகர்ரான் சல்மான் கான் ஒரு மேடையில் அவரை ஒரு ஆவெரேஜ் இசையமைப்பாளர் என்று கூறி ஏ.ஆர்.ரஹ்மான் கையை பிடிக்க முயற்சிப்பார். ஆனால், தனக்கான உடல்மொழியுடன் அதை அசால்ட்டாக நிராகரித்திருப்பர். மேலும் சல்மான் கான பற்றிய கேள்விக்கு அவரை கிண்டல் செய்யும் வகையில், எனக்கு பிடித்த மாதிறி அவர் நடிக்கும் பொது நான் அவர் படத்திற்கு இசையமைப்பேன் என்று கூறியிருப்பார்.
இது போன்று ஹிந்தியில் பல சம்பவங்களை செய்து தமிழுக்காக பல இடங்களில் குரல் கொடுத்து வருகிறார். ஆஸ்கர் மேடை முதல் IIFA மேடை முதல் மற்றும் கனடாவில் அவருக்காக நடத்தப்பட்ட இசைநிகழ்ச்சி வரை தமிழ் மொழியை உலக அரங்கில் தொடர்ந்து நிலை நிறுத்தி வருகிறார். காலப்போக்கில் தனது குருவையே மிஞ்சும் வகையில் வளர்ந்து அனைவரின் விருப்பமான இசையமைப்பாளராக வளம் வருகிறார். 30 ஆண்டுகாலம் ஏற்பட்டுள்ள மாற்றங்களை கணித்து தன்னையும் அதற்கேற்றாற் போல் மெருகேத்தி இன்று வரை இசையமைத்து அனைவருக்கும் ஒரு ரோல் மாடலாக திகழ்கிறார் இசைபுயல் ஏ.ஆர்.ரஹ்மான். ஒரு நேர்காணலில் அவர் பேசும் போது, “என் வாழ்வில் முக்கியமான தருணங்களில் நான் தேர்ந்தெடுப்பதற்கு அன்பு மற்றும் வெறுப்பு ஆகிய இரண்டும் இருந்தது அதில் நான் அன்பை மட்டுமே தேர்ந்தெடுத்தேன் தற்போது இங்கு இருக்கிறேன்” என்று கூறினார்.

இதன்மூலம் அவர் மக்களுக்கும் தனது ரசிகர்களுக்கும் அன்பயே காட்டுங்கள் என்று தொடர்ந்து வலியுறுத்தி வருகிறார். இவரின் பிறந்த நாளுக்கு அரசியல் தலைவர்கள் சினிமா பிரபலங்கள் மற்றும் இசை ரசிகர்கள் வாழ்த்துக்கள் தெரிவித்து வருகின்றனர். அவரது இசை எப்போதும் இளமையாக இருப்பது அவரும் என்றும் இளமையுடன் இருந்து வருகிறார்.

















