உங்கள் ஊர் செய்திகள் உங்கள் பார்வைக்காக…!! களத்தில் மதிமுகம்..!!
அரியலூர் மாவட்டம் :
அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே தமிழ்நாடு மாநில தொடக்க கூட்டுறவு வங்கி அனைத்து பணியாளர் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டனர். இதில் விற்பனையாளர்களுக்கு அபராத தொகையை இரண்டு மடங்காக உயர்த்தியது, அங்காடிகளில் கட்டுப்பாடற்ற பொருட்களை நிர்பந்தப்படுத்தி விற்பனை செய்ய கட்டாயப்படுத்துவதை ரத்து செய்ய வேண்டும், உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டனர்.
திருப்பூர் மாவட்டம் :
திருப்பூர் மாவட்டம் அவிநாசி சார் பதிவாளர் அலுவலகத்தில் லஞ்சம் பெறுவதாக கிடைத்த ரகசிய தகவலை அடுத்து, திருப்பூர் மாவட்ட லஞ்ச ஒழிப்புத்துறை ஆய்வாளர் கீதா லட்சுமி தலைமையில் காவல்துரையினர் அவிநாசி சார் பதிவாளர் அலுவலகத்தில் திடீர் ஆய்வு மேற்கொண்டனர். இந்த சோதனையில் கணக்கில் வராத சுமார் ஒரு லட்சம் ரூபாய் ரொக்கம் கைப்பற்றப்பட்டதாக தற்போது தகவல் வெளியாகியுள்ளது. மேலும் தொடர்ந்து சோதனை நடைபெற்று வருகிறது.
மயிலாடுதுறை மாவட்டம் :
மயிலாடுதுறை மாவட்டத்தில் தீபாவளி விற்பனை களைகட்டத் தொடங்கியுள்ளது. தீபாவளி பண்டிகைக்கு 7 நாட்களே உள்ள நிலையில் மக்கள் மாலை நேரங்களில் கடைவீதிக்கு குவிந்து வருகின்றனர். மயிலாடுதுறை நகரில் பெரியக்கடைத்தெரு என்ற இடத்தில் ஒரே தெருவில் 5-க்கு மேற்பட்ட பட்டாசு கடைகள் இயங்கி வருகின்றன. இந்நிலையில், அக்கடைகளில் மேற்கொள்ளப்பட்டுள்ள பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து மாவட்ட ஆட்சியர் ஏ.பி.மகாபாரதி நேரில் ஆய்வு செய்தார்.
வேலூர் மாவட்டம் :
வேலூர் மாவட்டம் நாராயணி மெட்ரிகுலேசன் பள்ளியில் பள்ளி மாணவர்களுக்கான இலவச மருத்துவ முகாமானது நடைபெற்றது. இம்முகாமினை நாராயணி மருத்துவமனையின் இயக்குநர் பாலாஜி துவங்கி வைத்தார். இவ்விழாவில் திரளான மாணவ,மாணவிகள் பங்கேற்றனர். மேலும் மாணவ, மாணவிகளுக்கு இலவசமாக பல்வேறு மருத்துவ பரிசோதனைகள் செய்யப்பட்டு சிகிச்சைகள் அளிக்கப்பட்டுதுடன் மருத்துவர்கள் உடல் நலன் சார்ந்த அறிவுரைகளை வழங்கினார்.
















