தமிழகத்தில் 10 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை..!!
தமிழகத்தில் 10 மாவட்டங்களுக்கு இன்றும் நாளையும் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாகவும்., அரபிக்கடல் மற்றும் வங்கக் கடலில் ஒரே நேரத்தில் 2 காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவாகி இருப்பதாக இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் தற்போது வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ளது., அதனால் தமிழகத்தில் கடந்த சில தினங்களாக கனமழை வெளுத்து வாங்கி வருகிறது..
அதேபோல் அரபிக்கடலில் அடுத்த 12 மணி நேரத்திற்கு புதிய காற்றழுத்தத் தாழ்வுப்பகுதி உருவாக இருப்பதாகவும் அவை நகர்ந்து மேற்கு திசையை நோக்கி செல்லும் எனவும். மேற்கு, வடமேற்கு திசையில் காற்றழுத்த தாழ்வுப்பகுதியில் இந்த காற்றானது செல்லும் எனவும் வானிலை ஆய்வுமையம் தெரிவித்துள்ளது..
கனமழை பாதிப்பு பகுதிகள் :
கிருஷ்ணகிரி, தருமபுரி, ஈரோடு, சேலம், நாமக்கல், நீலகிரி, கோவை, திருப்பூர், திண்டுக்கல் மற்றும் தேனி ஆகிய மாவட்டங்களுக்கு இன்றும் நாளையும் கனமழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வும் தெரிவித்துள்ளது..