5 அம்சங்களை கொண்ட பண்டியள் கல் கோபுர அமைப்பு..!!
பாப்பாரப்பட்டி அருகே மாரியம்மன் கோயிலில் மாவட்டத்திலேயே முதன் முதலில் உயிர் மெய் எழுத்துக்கள் பொறிக்கப்பட்ட கோவிலில் 10 டன் எடையுள்ள  பண்டியள் கல் கோபுரத்தின்  மீது வைக்கப்பட்டது.
பென்னாகரம். தர்மபுரி மாவட்டம் பென்னாகரத்தை அடுத்த பாப்பாரப்பட்டி அருகே உள்ள வீரச்செட்டி அள்ளி (எ)  ஆண்டியூர் கிராமத்தில் 150 வருட பழமை வாய்ந்த ஸ்ரீ மகாசக்தி மாரியம்மன்  திருக்கோயில்  அமைந்துள்ளது.  இந்த  பழமை  வாய்ந்த  கோயிலை  புதுப்பிக்க ஊர்  பொதுமக்கள் முடிவு செய்தனர்.
கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு கோயிலின் திருப்பணிக்காக சிவகங்கை மாவட்டம் காரைக்குடி விளாரிகாடு  பகுதியைச் சேர்ந்த 10 பேர் கொண்ட சிற்ப குழுவினாரை வரவழைக்கப்பட்டு பணியை தொடங்கினர். இக்கோயிலில் பழமை போற்றும் வகையில் கற்களை மட்டுமே பயன்படுத்தி கட்டப்பட்டுள்ளது.
இக்கோவில்  மாவட்டத்திலேயே முதன் முதலில் தமிழை போற்றும் வகையில் உயிர் எழுத்துக்கள் பொறிக்கப்பட்ட கோவிலாகும்  மேலும்  கோவில் நுழைவாயில் கற்களால் சுழலும்  தூண்கள் அமைக்கப்பட்டது. மேலும்  சித்தராகம், பத்மம், கண்டம், கபதம் , கால்கரி, யாழவரி, பூரிகல் ஆகிய  அம்சங்களை  உள்ளடக்கி  கருங்கற்களால்  சுமார் 520டன் கருங்கல் சிற்பி  கல்லால்  பண்டியள்  கல்லை உருவாக்கப்பட்டு  ஜேசிபி  இயந்திரம்  மூலம் கோபுரத்தின் மீது வைக்கப்பட்டது.
மேலும் மாரியம்மனுக்கு 12 விதமான அபிஷேகங்கள் செய்யப்பட்டு தீப ராதனை  பூஜைகள் மற்றும் மகா ஓமம் நடைபெற்றது. விழாவில் மேளதாளங்கள் முழங்க  சாமி தரிசனம் நடைபெற்றது .  இந்த விழாவில் ஊர் பொதுமக்கள் ஏராளமானோர் கலந்து கொண்டு சாமி தரிசனம்  செய்தனர். பிறகு பக்தர்களுக்கு அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது.
    
    
    
									
								
																
															 
			















