“திரெளபதி ஜெயந்தி விழா” 1008 அகல் விளக்குகள் ஏற்றி சிறப்பு வழிபாடு..!!
திரெளபதி அம்மன் ஆலயத்தில் திரெளபதி ஜெயந்தி விழா முன்னிட்டு 1008 அகல் விளக்குகள் ஏற்றி பெண்கள் சிறப்பு வழிபாட்டில் ஈடுபட்டனர்
ராணிப்பேட்டை மாவட்டம் மாந்தாங்கல் பகுதியில் அமைந்துள்ள திரெளபதி அம்மன் ஆலயத்தில் நேற்று திரெளபதி ஜெயந்தி விழா வெகு விமர்சியாக நடைபெற்றது. முன்னதாக திரெளபதி அம்மனுக்கு மகா அபிஷேகம் மற்றும் சிறப்பு அலங்காரங்கள் செய்யப்பட்டு தீபாராதனை காண்பிக்கப்பட்டது.
இதனை தொடர்ந்து 1008 அகல் விளக்குகளை பெண்கள் ஏற்றி குடும்பத்தில் துன்பம் நீங்கி இன்பமும், வளமும், ஆரோக்கியமும், ஒளிரும் விதமாக வேடுதல் செய்து வழிபாட்டில் ஈடுபட்டனர். மேலும் திரெளபதி அம்மனுக்கு வேத மந்திரங்கள் முழங்க பல்வேறு யாக பொருட்களை கொண்டு மகா புத்திர காமேஷ்டி யாகம் மேற்கொள்ளப்பட்டு வழிபாடு நடைபெற்றது.
பின்னர் பசு மாட்டிற்கு தீபாரத்தை காண்பித்து கோ பூஜை நடைபெற்றது. இதனை அடுத்து சிறப்பு அன்னதானமும் வழங்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியின் போது மாந்தாங்கல் மோட்டூர், மாந்தாங்கல் மேட்டு தெரு, மல்லிகாபுரம், பொன்னியம்மன் நகர், ஆகிய ஊர் பொதுமக்கள் மற்றும் திரெளபதி அம்மன் ஆலய ஆறுபடை முருகன் பக்தர்கள் என பலர் பங்கேற்று திரெளபதி அம்மனின் அருளை பெற்று சென்றனர்.
அதனை தொடர்ந்து இன்று காலை திரெளபதி அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு பூஜைகள் நடைபெற்றது..