துணிவு படத்தின் இரண்டாவது பாடலான “காசேதான் கடவுளடா” பாடல் நேற்று மதியம் வெளியாகியது. இந்த பாடலில் மஞ்சு வாரியார் படுவதை போன்ற காட்சிகள் இடம்பெற்றாலும் அவரின் குரல் அதில் இடம் பெறவில்லை. இதனால் அதனை குறிப்பிட்டு ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் பகிர்ந்து வந்த நிலையில் அதற்கு மஞ்சு வாரியார் விளக்கமளித்துள்ளார்.
https://twitter.com/ManjuWarrier4/status/1604448717268193280
நடிகர் அஜித் நடித்துள்ள துணிவு படம் வருகிற பொங்கலுக்கு வெளியாகவுள்ளது இதனை தொடர்ந்து அந்த படத்தை குறித்தான அப்டேட்கள் தொடர்ந்து வந்த வண்ணமே உள்ளது. இந்நிலையில், நேற்று மதியம் அந்த படத்தின் காசேதான் கடவுளடா பாடல் வெளியாகியது. இந்த படத்துக்கு ஜிப்ரான் இசை அமைக்க, வைசாக், மஞ்சு வாரியர் இணைந்து பாடி உள்ளனர். இருப்பினும் அவர்கள் வெளியிட்டுள்ள பாடலில் மஞ்சு வாரியாரின் குரல் கேட்கவில்லை. இதனால் அதை வைத்து சமூக வலைத்தளங்களில் மீம்ஸ்கள் பகிர்ந்து வைரலானது
இதற்கு மஞ்சு வாரியார் ட்விட்டர் மூலம் பதிலளித்துள்ளார். அதில், துணிவு படத்திலிருந்து காசேதன் கடவுளின் பாடல் வீடியோ வெளியாகியுள்ளது. இதில் என் குரல் கேட்கவில்லையே என்று கவலை படுபவர்களுக்கு கவலை வேண்டாம் வீடியோ பதிப்பிற்காக பதிவு செய்யப்பட்டது. உங்களுடைய அக்கறைக்கு நன்றி. மேலும், இதற்கிடையில் வேடிக்கையான ட்ரோல்களை நான் ரசித்தேன் என்ற அவரின் பதிவு வைரலாகி வருகிறது.