பிரமோஷனுக்கு அழைத்த தயாரிப்பாளர்… நிபந்தனைகளை விதித்த அபர்ணதி..!
அபர்ணதி:
தனியார் தொலைக்காட்சியில் ஔிபரப்பான நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு பிரபலமான இவர் ஜிவிபிரகாஷ் நடப்பில் வெளிவந்த ஜெயில் திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார்.
அதன்பின் இறுகப்பற்று திரைப்படத்தில் நடித்து ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றதை தொடர்ந்து இயக்குநர் வெற்றி இயக்கத்தில் ”நாற்கரப்போர்” திரைப்படத்தில் நடித்துள்ளார். இத்திரைப்படத்தை தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி தனது வி ஹவுஸ் புரொடக்சன்ஸ் சார்பாக வெளியிட உள்ளார்.
இந்த நிலையில் இந்த படத்தில் இசை வெளியீட்டு விழா நேற்று சென்னையில் நடைப்பெற்றது. அதில் கலந்து கொண்ட தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி, படத்தை பற்றியும் படத்தில் நடித்த நடிகை அபர்ணதியை குறித்து பேசியிருந்தார்.
சுரேஷ் காமாட்சி கூறியதாவது:
அவர் கூறுகையில் இந்த படத்தின் கதையை என்னிடம் கூறிய உடனே எனக்கு மிகவும் பிடித்தது. இப்படிப்பட்ட கதையை தேர்ந்தெடுத்ததற்காக தயாரிப்பாளர் வேலாயுதத்திற்கு முதலில் என்னுடைய வாழ்த்துகள்.
சினிமாவில் வெற்றி, தோல்வி என்பது மிகவும் சகஜமான ஒரு விஷயமாகும். நாம் நம்முடைய வேலையை சிறப்பாக செய்து இருக்கிறோமா என்பது தான் இங்கு முக்கியமானது.
மற்றவை அனைத்தும் ரசிகர்கள் கையில்தான் இருக்கிறது என பல சுவாரிசியமான தகவல்களை கூறி கொண்டிருந்தபோது படத்தில் நடித்த அபர்ணதி மிகவும் சிறப்பாக நடித்திருக்கிறார். ஆனால் இதில் வேதனைக்குரிய விஷயம் என்னவென்றால் அபர்ணதி புரமோஷனுக்கு வரவில்லை என்பது தான்.
3 லட்சம் கேட்ட அபர்ணதி:
பிரமோஷனுக்கு அவரை அழைத்த போது, நான் வரமாட்டேன் ப்ரமோஷனுக்கு வரவேண்டும் என்றால் 3லட்சம் கொடுத்தால் மட்டுமே நான் வருவேன் என்று கூறினார். அது எங்களுக்கு மிகவும் புதிதாக இருந்தது.
அதுமட்டுமல்ல அவர் பிரமோஷனுக்கு வருவதற்கு சில நிபந்தனைகளையும் விதித்தார். அதை எல்லாம் இங்கு பேசினால் மிகப்பெரிய சர்ச்சையாக மாறிவிடும். மேடையில் அவர் யாருடன் உட்கார வேண்டும் என்பது வரை அதில் அடங்கியுள்ளதாக சுரேஷ் காமாட்சி கூறியுள்ளார்.
-பவானி கார்த்திக்