80’s 90s களின் மனதை கொள்ளையடித்த மும்தாஜ்..! மும்தாஜ் 44..?
தமிழ் சினிமாவில் 80 மற்றும் 90களின் கவர்ச்சி கன்னியாக வலம் வந்தவர் நடிகை மும்தாஜ். மோனிசா என் மோனாலிசா என்ற திரைப்படத்தில் டி.ராஜேந்தர் மூலம் அறிமுகம் செய்யபட்டார்.
இந்த படம் மக்களிடயே நல்ல விமர்சனததை பெற விட்டாலும் அதில் இடம் பெற்ற ஹலோ ஹலோ, உயிரே வா உறவே வா பாடல்கள் மிகப்பெரிய அளவில் வெற்றிப்பாடலாக அமைந்தது. தனது முதல் படத்திலேயே மும்தாஜ் மக்கள் மனதில் இடம் பிடித்தார்.
அதனை தொடர்ந்து மலபார் போலீஸ், குஷி, பட்ஜெட் பத்மநாபன், லூட்டி, சாக்லேட் உள்ளிட்ட பல படங்களிலும் நடித்து தமிழ் சினிமாவில் கவனிக்கப்படும் நடிகையாக இருந்தார்.
குறிப்பாக இவர் நடிக்கும் திரைப்படங்களில் கதைகள் இவருக்கு சரியாக அமையாவிட்டாலும் அதில் இடம்பெறும் பாடல் மூலம் ரசிகர்களின் மனதை கொள்ளை அடித்துவிடுவார்.
எடுத்துக்காட்டாக எஸ்.ஜே.சூர்யா இயக்கத்தில் உருவான குஷி படத்தில் கவர்ச்சி உடையில் விஜயுடன் சேர்ந்து கட்டிப்புடி கட்டிப்புடிடா.. கண்ணாளா கண்டபடி கட்டிப்புடிடா என்ற பாடல் மற்றும் மலை மலை மல்லே மல்லே மருத மலை மல்லே என்ற பாடலாம் இன்றைக்கும் கல்லூரி மாணவிகள் விடுதியில் இருக்கும் மாணவிகள் இன்றைக்கும் ரிப்பிட் மோடில் குத்தாட்டம் போட்டு கொண்டு தான் இருகின்றனர்.
தமிழ் சினிமா மட்டுமின்றி தெலுங்கு, மலையாளம், கன்னட மொழி படங்களிலும் கலக்கி வந்த நடிகை மும்தாஜ், கடைசியாக ராகவா லாரன்ஸ் நடித்த ராஜாதி ராஜா படத்தில் சைதை சைலஜா என்ற வி்ல்லி கேரக்டரில் நடித்த இவருக்கு வசனத்தில் பன்ச் வைக்காவிட்டால் எப்படி.. அதாவது தமிழ்ல்ல சொன்னா குத்து, இங்கிலீஷ்ல சொன்னா டெத்து என்பது உள்பட ஏகப்பட்ட பன்ச் டயலாக்குகளை படு கேஷுவலாக பேசி அசத்தியிருப்பார் நடிகை மும்தாஜ்.
அதன்பின் இரண்டு தெலுங்கு படங்களில் நடித்த அவர், சினிமாவை விட்டே விலகினார். பின்னர் நீண்ட இடைவேளிக்கு பிறகு தனியார் தொலைக்காடசியில் ஔிபரப்பான நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு விமர்சனத்திற்கு ஆளானார்.
இந்த நிலையில் சமிபத்தில் அளித்த பேட்டியில் மொத்தமாக மும்தாஜ் ஆன்மீகவாதியாக மாறியதாக கூறியிருந்தார். தற்போது இந்த பழைய வீடியோவை தேடி எடுத்த நெட்டிசன்கள் அதனை ட்ரென்ட் செய்து வருகின்றனர்.
இதனால் சினிமாவை விட்டு முழுவதுமாக விலகிய நடிகை மும்தாஜ் இன்று தனது 44வது பிறந்த நாளை கொண்டாடி வருகிறார். அவருக்கு ரசிகர்கள் பட்டாளம் வாழ்த்துகளை தெரிவித்து வரும் நிலையில் நமது மதிமுகம் குடும்பத்தினர் சார்பாக இனிய பிறந்த நாள் வாழ்த்துகள்.
-பவானி கார்த்திக்