தமிழகத்தில் தொடரும் கனமழை..!! குறிப்பிட்ட மாவட்டங்களுக்கு ரெட் அலார்ட்..!
தமிழகத்தில் கோடை மழை தற்போது கொட்டி தீர்த்து வருகிறது.., கடந்த சில மாதங்களாக வெயில் வாட்டி எடுத்து வந்த நிலையில் தற்போது கனமழை பெய்து வருவது மக்களிடையை உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.. இந்நிலையில் இன்னும் 5 நாட்களுக்கு கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வுமையம் தெரிவித்துள்ளது.
அதன் அடிப்படையில் சேலம், ஈரோடு, திருப்பூர், கோயம்புத்தூர், காரைக்கால், நாகப்பட்டினம், மதுரை, திருச்சி, அரியலூர் மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலார்ட் விடப்பட்டுள்ளது. இன்னும் 5 நாட்களுக்கு மேற்கண்ட மாவட்டங்களில் 115.6 முதல் 204.4 மில்லி மீட்டர் வரையிலான கனமழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வுமையம் தெரிவித்துள்ளது.
சென்னை, காஞ்சிபுரம், கடலூர், விழுப்புரம், கன்னியாகுமரி, போன்ற மாவட்டங்களுக்கு ரெட் அலார்ட் விடப்பட்டுள்ளது.., 24மணி நேரத்திற்கு குறைந்த பட்சமாக 204.5 மில்லி மீட்டர் வரையிலான கனமழை பெய்யக்கூடும் எனவும், கடலோர பகுதிகளுக்கு பலத்த காற்றுடன் கூடிய கனமழைப் பெய்யும் எனவும் அறிவித்துள்ளது..
மேலும் இன்னும் 5 நாட்களுக்கு கனமழை பெய்யும் என்பதால்.., மின்சார பாதிப்புகள், போக்குவரத்து பாதிப்பு ஏற்படக்கூடும் என்பதால் தமிழகத்தில் தேவையான முன்னேற்பாடுகளை அரசு மேற்கொள்ள தயாராகி வருகிறது.