அதிமுக எம்எல்எ அன்பழகன் காலமானார்.!!
திருவண்ணாமலை மாவட்டம் பெரணமல்லூர் தொகுதியை சேர்ந்த அதிமுக முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் ஏ.கே.எஸ். அன்பழகன் உடல்நலக்குறைவால் இன்று காலமானார்.
இவர் எம்.ஜி.ஆர். மன்ற இணை செயலாளராகவும் அக்கட்சியின் தீவிர தொண்டனாகவும் பணியாற்றி வந்துள்ளார். இவர் 2001ல் திருவண்ணாமலை மாவட்டம் பெரணமல்லூர் தொகுதியில் எம்.எல்.ஏவாக பதவியேற்றார். இவர் சட்டமன்ற தொகுதி உறுப்பினராக பொறுப்பேற்றதில் இருந்து அப்பகுதி மக்களுக்கு பல்வேறு நலத்திட்டங்களை செய்து வந்துள்ளார்.
மக்களுக்கு இவர் மீது இருந்த அன்பால் 2006ம் ஆண்டு நடைபெற்ற தேர்தலிலும் இவர் மீண்டும் எம்.எல்.ஏவாக தேர்வு செய்யப்பட்டார். இந்நிலையில் நீண்ட நாட்களாக உடல்நலம் பாதிக்கப்பட்டிருந்த சட்டமன்ற உறுப்பினர் ஏ.கே.எஸ். அன்பழகன் உடல்நலக்குறைவால் இன்று காலமானார்.
அவரது மறைவுக்கு அதிமுக அரசியல் கட்சியினர் உறுப்பினர்கள் உட்பட பல்வேறு அரசியல் கட்சி தலைவர்களும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.