சென்னையில் நாளை முதல் தண்ணீர் வராது..!! அதிர்ச்சியில் சென்னை மக்கள்..!!
தண்ணீர் எடுக்க முறையான அனுமதி தமிழக அரசு கொடுக்க வேண்டும் என தமிழ்நாடு தனியார் தண்ணீர் லாரி உரிமையாளர் சங்கம் கோரிக்கை முன்வைத்துள்ளது.., அதுகுறித்து சரியான நடவடிக்கை எடுக்காததால் வேலை நிறுத்தத்தை தொடங்கியுள்ளனர்.
அதன் படி நாளை சென்னையின் அனைத்து பகுதிகளிலும் 15 ஆயிரம் தனியார் தண்ணீர் லாரிகள் இயங்காது எனவும், முறையான அனுமதி கிடைக்கும் வரை இந்த போராட்டம் தொடரும் எனவும் லாரி உரிமையாளர் சங்கம் தெரிவித்துள்ளது.
தமிழ்நாடு தண்ணீர் லாரி உரிமையாளர் சங்கத்தினரின் காலவரையற்ற இந்த உண்ணாவிரத போராட்டம் எப்பொழுது முடியும் என யாரும் சொல்லவில்லை எனவே நாளை முதல் சென்னையில் குடிநீர் தட்டுப்பாடு நிலவும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த நிலைமையில் கூட சில நெட்டிசைன்கள் மீம்ஸ் போட்டு போட்டோ மற்றும் வீடியோவை சமூக வலைதளத்தில் பரப்பி வருகின்றனர்.