4ம் கட்ட லோக்சபா தேர்தல்.! 96 தொகுதிகளில் வாக்குபதிவு..!!
இந்தியாவில் லோக்சபா தேர்தல் 7கட்டமாக நடைபெற உள்ள நிலையில் முதற்கட்டமாக தமிழ்நாடு மற்றும் பாண்டிச்சேரியில் கடந்த ஏப்ரல் 19ம் தேதி நடைபெற்றது..,
2-ம் கட்டமாக கர்நாடக மற்றும் கேரளா மாநிலத்திலும் நடைபெற்றது.., கடந்த மாதம் 26-ம் தேதி 88 தொகுதிகளுக்கு வாக்குப்பதிவு நடைபெற்றது. இதில் 66.71 சதவீத ஓட்டுகள் பதிவாகின.
3-ம் கட்டமாக ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் 93 தொகுதிகளுக்கு கடந்த 7-ந் தேதி தேர்தல் நடைபெற்றது. இதில் 65.68 சதவீத வாக்குகள் பதிவானதாக தேர்தல் ஆணையம் தெரிவித்தது.
இந்நிலையில் 4ம் கட்ட தேர்தலாக இன்று ஆந்திரா மாநிலத்தில் 96 தொகுதிகளில் நடைபெற்று வருகிறது.., லோக்சபா தேர்தல் ஒருபக்கம் நடைபெற்று கொண்டு இருக்க மறுபக்கம் சட்டசபை தேர்தலும் இன்று ஆந்திராவில் நடைபெறுகிறது,
ஆந்திராவில் உள்ள 175 சட்டசபை தொகுதிளில் இன்று காலை 7 மணி முதலே வாக்குபதிவுகள் தொடங்கியுள்ளது. 175 இடங்களில் சட்டமன்றத்திலும், 29 இடங்களில் பிற்படுத்தப்பட்ட இடத்தினருக்கும் இட ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது,.
ஒரு பக்கம் ஜெகன் மோகன் ரெட்டி ஆட்சியைத் தக்க வைத்துக் கொள்ள வேண்டும் என்ற முனைப்பில் ஈடுபட்டு வருகிறார். மற்றொரு பக்கம் ஜெகன் மோகன் ரெட்டியை வீழ்த்த வேண்டும் என்ற நோக்கில் தெலுங்கு தேசம் கட்சியின் சந்திரபாபு நாயுடு, பவன் கல்யாண், ஒய்எஸ் ஷர்மிளா போன்றோர் முழு வீழ்சியில் செயல்பட்டு வருகின்றனர்.
ஆந்திராவில் 2.02 கோடி ஆண் வாக்காளர்களும், 2.1கோடி பெண் வாக்காளர்களும் 3,421 மூன்றாம் பாலினத்தவர்களும் மொத்தம் 4.14கோடி வாக்காளர்கள் உள்ளனர்.
ஒய்.எஸ்.ஆர்.காங்கிரஸ் கட்சி ஜெகன் மோகன் ரெட்டி- புலிவெந்துலா, தெலுங்கு தேசம் கட்சியின் தலைவர் சந்திரபாபு நாயுடு – குப்பம், ஜனசேனா தலைவர் பவன் கல்யாண் – பித்தாபுரம், பாஜக தலைவர் புரந்தேஸ்வரி – ராஜமகேந்திராவரம் தொகுதியிலும் போட்டியிடுகின்றனர்..
இன்று காலை 7 மணி முதலே பிரபலங்கள் தங்கள் வாக்குகளை பதிவிட்டுள்ளனர், மேலும் வாக்காளர்களும் நீண்ட வரிசையில் நின்று தங்களின் ஜனநாயக கடமையை ஆற்றி வருகின்றனர்..
சிறுகதைகள் – 75 | தொடர் கதை – 2 | கிரைம்- 572 + | கவிதைகள் – 150 + | எழுத்தாளர் – 4000 + | ஆன்மிகம் தொகுப்பாளர்
நம்மை வீழ்த்தியவர்கள் முன் ஜெயிக்க வேண்டுமே.. தவிர அடுத்தவர்களை வீழ்த்தி ஜெயிக்க கூடாது..