3வது கட்ட லோக்சபா தேர்தல்..! மேற்கு வங்கத்தில் இவ்வளவு வாக்கு பதிவா..?
பதினெட்டாவது மக்களவை தேர்தல் 543 நாடாளுமன்ற உறுப்பினர்களை தேர்வு செய்யும் லோக்சபா தேர்தல் இந்தியா முழுவதும் ஏழு கட்டங்களாக நடைபெற்று வருகிறது.
ஒன்றாம் தேதி இறுதி கட்ட வாக்குப்பதிவு நடைபெறும் நிலையில் நான்காம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ளது.
கடந்த ஏப்ரல் 19ஆம் தேதி தமிழ்நாடு உள்ளிட்ட 21 மாநிலங்களில் 102 தொகுதியிலும், 26ஆம் தேதி 13 மாநிலங்களில் 89 தொகுதிகளுக்கு இரண்டாம் கட்ட தேர்தலானது நடைபெற்றது.
எந்த தொகுதியில் எவ்வளவு :
இந்த நிலையில் அசாம் மாநிலத்தில் உள்ள நான்கு தொகுதிகள், பிகாரில் 5 தொகுதிகள், சத்தீஸ்கரில் ஏழு தொகுதிகள், தத்ரா நகர் ஹவேலி மற்றும்டையு டாமன் யூனியன் பிரதேசங்களில் இரண்டு தொகுதி, கோவாவில் இரண்டு தொகுதி, குஜராத்தில் 23 தொகுதி, கர்நாடகாவில் 14 தொகுதி, மத்திய பிரதேச மாநிலத்தில் ஒன்பது தொகுதி, மகராஷ்டிரா மாநிலத்தில் 11 தொகுதி, உத்தரப்பிரதேசத்தில் பத்து தொகுதிகள் மேற்கு வங்கத்தில் நான்கு தொகுதிகளுக்கான வாக்குப்பதிவு இன்று காலை 7 மணிக்கு தொடங்கியது.
இந்த தேர்தலில் மத்திய அமைச்சர் அமித்ஷா, ஜோதிர் ஆதித்ய சிந்தியா, டிம்பிள் யாதவ், சிவராஜ் சிங் சவுகான், சுப்ரியா சூலே உள்ளிட்ட நட்சத்திர வேட்பாளர்களோடு 1352 வேட்பாளர்கள் களமிறங்குகின்றனர். இந்நிலையில் ஏற்பாடுகள் அனைத்தும் தயாராக இருந்த நிலையில், வாக்குப் பதிவு காலை 7 மணிக்கு திட்டமிட்டபடி தொடங்கி நடைபெற்று வருகிறது.
வாக்கு பதிவு :
வாக்குப் பதிவு மையங்களில் வாக்காளர்கள் ஆர்வத்துடன் காத்திருந்து வாக்களிப்பதை காண முடிகிறது. அங்கு போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றன. பதற்றமான வாக்குச் சாவடிகளில் கூடுதல் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
மாலை 6 மணியுடன் வாக்குப் பதிவு நிறைவடையும் நிலையில், அதற்கு முன்னால் வருபவர்களுக்கு டோக்கன் வழங்கப்பட்டு வாக்களிக்க அனுமதிக்கப்படுவர்.
பாஜக தனித்து வெற்றி :
குஜராத்தில் சூரத் மக்களவைத் தொகுதியில் பாஜக வேட்பாளர் முகேஷ் தலால் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டார்.
எனவே அங்கு தேர்தல் நடைபெறவில்லை. மத்திய பிரதேச மாநிலத்தில் பெதோல் தொகுதியில் பகுஜன் சாமாஜ் கட்சி வேட்பாளர் காலமானதால் ஏற்கனவே தள்ளி வைக்கப்பட்டு இருந்த தேர்தல் இன்று நடக்கவிருக்கிறது.
தேர்தல் ஒத்திவைப்பு :
மேலும் இன்று தேர்தல் நடக்க ஜம்மு காஷ்மீரின் அனந்தநாக்-ரஜோரி மக்களவை தொகுதியில் தேர்தல் நடக்க இருந்த நிலையில் பனிபொழிவு காரணமாக நெடுஞ்சாலை மூடப்பட்டுள்ளது.
இதன் காரணமாக அந்த தொகுதியில் நடக்கவிருந்த தேர்தல் மே 25ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
காலை7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கிய நிலையில் மக்கள் விறுவிறுப்பாக வாக்களித்து வருகிறார்கள். அந்த வகையில் காலை 9 மணி நிலவரப்படி இதுவரை 10.57 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளன.
இன்றைய நிலவரம் :
அஸ்ஸாம் 10.12%
பீகார் 10.03%
சத்தீஸ்கர் 13.24%
தாத்ரா நகர் ஹவேலி மற்றும் டாமன் டையூ 10.13%
கோவா 12.35%
குஜராத் 9.87%
கர்நாடகா 9.45%
மத்தியப் பிரதேசம் 14.22%
மகாராஷ்டிரா 6.64%
உத்தரப் பிரதேசம் 11.63%
மேற்கு வங்காளம் 14.60%
சிறுகதைகள் – 75 | தொடர் கதை – 2 | கிரைம்- 572 + | கவிதைகள் – 150 + | எழுத்தாளர் – 4000 + | ஆன்மிகம் தொகுப்பாளர்
நம்மை வீழ்த்தியவர்கள் முன் ஜெயிக்க வேண்டுமே.. தவிர அடுத்தவர்களை வீழ்த்தி ஜெயிக்க கூடாது..