ஒரே நாளில் 36 லட்சம் பால் கொள்முதல்..! அடுத்த கட்ட நடவடிக்கை..? அமைச்சர் மனோ தங்கராஜ் பேட்டி..!
தமிழ்நாட்டில் நேற்று ஒரே நாளில் அதிகபட்ச பால் கொள்முதலாக 36.09 லட்சம் லிட்டர் பால், 27 மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தியாளர் ஒன்றியங்கள் மூலம் ஆவின் கொள்முதல் செய்துள்ளது என பால்வளத்துறை அமைச்சர் மனோ தங்கராஜ் கூறியுள்ளார்.
மேலும் பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கங்களின் உள்ளூர் விற்பனையான 4 லட்சம் லிட்டர் பால் கணக்கில் கொள்ளும்போது தமிழ்நாட்டில் பால்வளத்துறை மூலமாக 40 லட்சம் லிட்டர் பால் கொள்முதல் செய்யப்பட்டு வருகிறது என்றும் தற்போது 2800 மெட்ரிக் டன் வெண்ணெய்யும், 4200 மெட்ரிக் டன் பால் பவுடரும் கையிருப்பில் உள்ளது இன்றும் தெரிவித்தார்.
இந்த கையிருப்பைக் கொண்டு எதிர்வரும் பண்டிகை காலங்களுக்கு தேவையான பால் பொருட்களை பொதுமக்களுக்கு தங்குதடையின்றி விநியோகம் செய்வது உறுதி செய்யப்படும் என தெரிவித்தார். மேலும் பொதுமக்களுக்கு ஆவினின் அனைத்து வகையான பொருட்களும் தங்குதடையின்றி கிடைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
அதேபோல் விரைவில் தயிர் மற்றும் பன்னீர் விற்பனையை அதிகரிக்கும் வகையில் மாவட்டம் தோறும் மொத்த விற்பனையாளர்களை நியமிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்று தெரிவித்துள்ளார்.
– லோகேஸ்வரி.வெ