3 கீமீ போக்குவரத்து நெரிசல்..!! சம்பித்த வாகன ஓட்டிகள்..!! பரபரப்பான தேசிய நெடுஞ்சாலை..!!
மதுராந்தகம் சென்னை To திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் சுமார் 3 கிலோ மீட்டர் தூரம் கடும் போக்குவரத்து நெரிசல் தேசிய நெடுஞ்சாலை குறுக்கே உள்ள நடை மேம்பாலத்தை அகற்றும் பணியாள் வாகனப் போக்குவரத்து நெரிசல்
தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் கடந்த மூன்று நாட்களாக கனமழை வெளுத்து வாங்கியது., குறிப்பாக சென்னைக்கு ரெட் அலார்ட் விடப்பட்டிருந்தது.. கடந்த இரண்டு நாட்களாக பெய்த கனமழையால் சென்னை பல்வேறு பகுதிகளில் தண்ணீர் தேங்காமல் அதனை துரிதமாக அப்புறபடுத்தி சென்னை மாநகராட்சி செயல்பட்டது..
செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் இரு தேசிய நெடுஞ்சாலை நடுவில் மோச்சேரி கிராமத்திற்கு செல்லக்கூடிய நடை மேம்பாலம் 2008 ஆம் ஆண்டு போடப்பட்டது..
இந்த நடை மேம்பாலம் வெறும் சேதமடைந்து மக்கள் பயன் பாட்டிற்கில்லாமல் இருந்தது இந்த நடை மேம்பாலம் எந்த நேரத்திலும் கீழே விழுந்தால் தேசிய நெடுஞ்சாலியில் பெரும் விபத்து ஏற்பட காரணமாக இருக்கும் ஆகவே இதை அகற்ற கோரிக்கை வைத்தனர்..
இந்நிலையில் கடந்த சில நாட்களாக பெய்த மழையால் அப்பகுதிகள் மழை நீர் சூழ்ந்தது.. இதனால் வாகன ஓட்டிகள் கடும் சிரமத்திற்கு ஆளாகினர்..
தற்போது இந்த பாலம் மிகப்பெரிய இயந்திரம் மற்றும் இரண்டு கிரேன் கேஸ் கட்டர் கொண்டும் 50 க்கும் மேற்பட்ட ஊழியர்கள் அகற்றும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர் இதனால் சென்னை To திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் சுமார் 3 கிலோ மீட்டர் தூரம் கடும் போக்குவரத்து நெரிசல் காணப்படுகிறது
இந்த போக்குவரத்து நெரிசலை சரி செய்யும் பணியில் சுமார் 50க்கும் மேற்பட்ட காவல் துறையினர் ஈடுபட்டு வருகின்றனர்.