ரஷ்யா – உக்ரைன் போரினால் இதுவரை இரு நாடுகளையும் சேர்ந்த 2 இலட்சம் இராணுவ வீரர்கள் உயிரிழந்துள்ளதாக ஐ.நா சபையின் அறிக்கை தெரிவித்துள்ளது.
ரஷ்யா மற்றும் உக்ரைன்க்கு இடையே கடந்த 10 மாதங்களாக போர் தொடர்ந்த வண்ணம் உள்ளது. போரினால் இதுவரை உயிரிழந்துள்ள இரு நாட்டு இராணுவ வீரர்கள் மற்றும் பொதுமக்களின் எண்ணிக்கை தொடர்பான அறிக்கையை ஐ.நா சபை வெளியிடப்பட்டுள்ளது.
அந்த அறிக்கையில், ரஷ்யாவின் உக்ரைன் மீதான ஆக்கிரமிப்பின் விளைவாக இதுவரை உக்ரைன் நாட்டின் அப்பாவிப் பொதுமக்கள் 6 ஆயிரத்து 884 பேர் உயிரிழந்துள்ளதாகவும், 10,947 பேர் காயமடைந்துள்ளதாகவும் ஐ.நா சபையின் மனித உரிமைகளுக்கான ஆணையகம் தெரிவித்துள்ளனது.
Discussion about this post