கிருஷ்ணகிரி மாவட்டம், அடுத்த ஜாலியா மத்தூர் இருளர் காலணி பகுதியை சேர்ந்தவர் முருகன். கூலித்தொழிலாளியான இவருக்கு மூன்று குழத்தைகள் உள்ளனர். பள்ளி விடுமுறை என்பதால் வழக்கம்போம் அருகில் உள்ள விவசாய நிலங்களில் உள்ள காய்ந்த குச்சிகளை சேகரித்து வருவது விடுமுறை நாட்களில் வழக்கமான குழந்தைகளின் பணியாகும். அந்த வகையில் இவரது மகள் புவனா (10) மற்றும் வினோத் (8) ஆகிய இருவரும் இன்று மதியம் விறகு குச்சிகளை சேகரிப்பதற்காக சென்றுள்ளனர்.
சுமார் 2 மணி நேரமாகியும் குழந்தைகள் வராததை கண்டு வேதனையடைந்த முருகன், அவர்கள் செல்லும் வழக்கமான பாதையில் சென்றுள்ளார். அப்போது இவர்கள் குடியிருப்பு அருகே உள்ள பள்ளத்தூர் ஏரியில் இரு குழந்தைகளும் ஏரியில் மூழ்கி உயிரிழந்திருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தார். பின்னர் அவரே ஏரிக்குள் சென்று இரு குழந்தைகளையும் மீட்டு தனது தோளில் போட்டு வீட்டிற்கு கொண்டு வந்தார்.
விபரம் அறிந்த மத்தூர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று உடலை மீட்டு உடற்கூறு ஆய்வுக்காக மத்தூர் அரசு மருத்துவமனை கொண்டு வந்தனர். ஒரே குடும்பத்தை சேர்ந்த இரு குழந்தைகள் நீரில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் அக்கிராமத்தில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
















