விஜய்வர்மாவுடன் டேட்டிங் சென்ற பிரபல நடிகை..?
மும்பை: தென்னிந்திய திரை உலகில் முன்னணி நடிகையாக இருக்கும் பலரில். நடிகை “தமன்னா”வும் ஒருவர். கேடி படத்தின் மூலம் தமிழ் சினிமாவில், கால் பதித்த தமன்னா. பையா, சிறுத்தை, கண்டேன் காதலை போன்ற படங்களின் மூலம் ரசிகர்களை கவர தொடங்கினார்.
ஆனால் சுறா, வீரம் போன்ற படங்களில் நடித்த பின் தனக்கென்று ஒரு ரசிகர் கூட்டத்தை உருவாக்கினார். இதனால், அவருக்கு தொடர்ந்து நடிக்க வாய்ப்பு கிடைத்தது.

தமிழில் மட்டுமின்றி தெலுங்கு, ஹிந்தி போன்ற படங்களிலும் ஹிட் கொடுத்தார். இதனால் இவருக்கு சூப்பர் ஸ்டார் ரஜினியுடன் ஜெயிலர் படத்தில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது.
இந்நிலையில் நேற்று இரவு மும்பை பாலிவுட் நடிகர் விஜய் வர்மாவுடன் நடிகை தமன்னா காரில் இருவரும் இருக்கும் புகைப்படம், டேட்டிங் சென்ற வீடியோ, என இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார். அதுவும் வைரலாக பரவியுள்ளது.