என்ன சார் சொல்றீங்க.. மும்பை டபுள் டக்கர் பேருந்து..?
மும்பையின் புகழ்பெற்ற டபுள் டக்கர் பேருந்துகள் கடந்த செப்டம்பர் 15ம் தேதி அன்று தனது கடைசி பயணத்தை முடித்தது. மேலும் பிரஹன் மும்பை மின்சாரம் மற்றும் போக்குவரத்து (பெஸ்ட்) கழகம்.., மீதம் இருந்த ஐந்து பேருந்துகளையும் படிப்படியாக நிறுத்த திட்டமிட்டது.
கேட்வே ஆஃப் இந்தியாவிற்கும் மரைன் டிரைவிற்கும் சுற்றுலாப் பயணிகளளை ஏற்றி கொண்டு வளம் வந்த ஓபன்-டெக் டபுள் டக்கர் பேருந்து அக்டோபர் 5ம் தேதிக்குள் மீண்டும் பயணத்தை மேற்கொள்ளும் என மும்பை போக்குவரத்துக்கு பிரிவு அறிவித்துள்ளது…,
மும்பை அரசு வெளியிட்ட இந்த அதிகாரப்பூர்வ அறிக்கையை, வரும் நாட்களில் சுற்றுலா வழித்தடங்களில் மின்சார ஏசி டபுள் டக்கர்களை அறிமுகப்படுத்த இருப்பதாகவும்.., புதிதாக வரும் 18 ஏசி டபுள் டக்கர் பேருந்துகளில் புறநகர்ப் பகுதிகளுக்கு 10 மற்றும் தெற்கு மும்பைக்கு 8 ஒதுக்கப்பட்டு இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது…
Discussion about this post