பாமகவுக்கு சீட்டு கிடைக்குமா..? அதிமுகவின் 9+1 ரகசிய கோர்டு ..!!
இந்த முறை யார் யாருடன் கூட்டணி வைத்துக்கொள்ள போகிறார்கள் என்பதே பெரும் எதிர்பார்ப்பாக இருக்கிறது அந்த வகையில் பாமக தன்னுடைய கூட்டணி முடிவை வெளியிடுமா..? என பல எதிர்பார்க்கப்படுகிறது..
இந்த முறை திமுக கூட்டணி பலமாக இருக்கும் நிலையில் அவர்களுடன் கூட்டணி வைத்துக்கொள்ள வேண்டும் என்ற நோக்கில் பாமக முயன்று வருகிறது.., ஆனால் அதற்கு தமிழக முதல்வரும் திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் பிடிகொடுக்காமல் மறுப்பு தெரிவித்துள்ளார்..
அப்படியே கூட்டணி வைத்துக்கொண்டாலும் கூட 3 சீட்டிற்கு மேல் கொடுக்கும் எண்ணம் திமுகவிற்கு இல்லை என்பதால் கூட்டணி வைத்துகொள்ள முடியாது என மறுப்பு தெரிவித்துள்ளது..
இதுகுறித்து திமுக மற்றொரு காரணமும் தெரிவித்துள்ளது வருகிற 2௦26ல் மீண்டும் மு.க.ஸ்டாலினை ஏற்போம் என அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.., அதற்கு திமுக சில கண்டிஷனை போட்டதால் அன்புமணி மறுப்பு தெரிவித்துள்ளதாக சொல்லப்படுகிறது..
அதிமுகவுடனாவது பாமக கூட்டணி வைத்துக்கொள்ளுமா என கேட்டதற்கு சில பேச்சு வார்த்தைகள் நடந்து கொண்டு இருப்பதாகவும் 9+1 என்ற ரீதியில் ஒரு சீக்ரெட் கொடு அறிவித்துள்ளது பாமக பேசிய பேரம் அதிமுகவிற்கு சரிபட்டு வராததால் அதிமுக பாமக கூட்டணி சேராது என அன்புமணி தெரிவித்துள்ளார்..
இதற்கு முன் நடந்த தேர்தலில் அதிமுக பாமக கூட்டணியில் பெரும் வெற்றி கிடைக்கவில்லை அத்துடன் 1௦.5% சதவிகித இட ஒதுக்கீடு பிற சமுதாயத்தினரை ஒட்டு போட விடாமல் செய்துள்ளது.. அந்த ஓட்டுகள் கிடைக்காமல் போனதற்கு காரணம் பாமக தான் என அதிமுக முன்னால் தலைவர்கள் கருத்து தெரிவித்து வருவதால் அதிமுக – பாமக கூட்டணி இணைவது சந்தேகம் என எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்..
சரி பாஜகவுடனாவது கூட்டணி கிடைக்குமா..? என சென்ற பாமக ஒதுக்கபடும் 13 தொகுதிகளிலும் வெற்றி பெற்றால் மட்டுமே பாமகவிற்கு எம்.பி சீட் கொடுக்கப்படும் என பாஜக நிபந்தனை விதித்துள்ளது..
ஒவ்வொரு கட்சியும் ஒவ்வொரு நிபந்தனை விதித்து வருவதால் பாமக யாருடன் கூட்டணி வைத்துக்கொள்ளும் இதனால் அரசியல் வட்டாரத்தில் பெரும் எதிர்பார்ப்பு கூடி விட்டது..
பாமகவை பொறுத்த வரை எந்த கட்சி ஜெயிக்கிறதோ அந்த கட்சியில் இருக்க வேண்டும் என்பதே பாமகவின் முடிவு வடமாநிலங்களில் பாமகவிற்கு ஆதரவு கிடக்கும் என்ற பட்சத்தில் பாமக செயல்பட்டு வருவதாக சொல்லபடுகிறது..
அதிமுக, திமுக, பாஜக யாருடன் கூட்டணி என்பதை விட பாமகவிற்கு சீட்டு கிடைக்குமா என்பதே முதல் கேள்வி என்பதால் இந்த கூட்டணி பற்றி பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும் என அரசியல் கட்சி தலைவர்கள் தெரிவித்துள்ளனர்..
சிறுகதைகள் – 75 | தொடர் கதை – 2 | கிரைம்- 572 + | கவிதைகள் – 150 + | எழுத்தாளர் – 4000 + | ஆன்மிகம் தொகுப்பாளர்
நம்மை வீழ்த்தியவர்கள் முன் ஜெயிக்க வேண்டுமே.. தவிர அடுத்தவர்களை வீழ்த்தி ஜெயிக்க கூடாது..