தமிழர் முன்னேற்ற படை தலைவர் வீரலட்சுமி அவர்கள் சார்பாக 2 கோடி ரூபாய் நஷ்ட ஈடு கேட்டு வழக்கில் நோட்டீஸ்ஸை நாம் தமிழர் கட்சி தலைவர் சீமான் அவர்களுக்கு நீதிமன்றம் தரப்பில் நோட்டீஸ் அனுப்பி உள்ளனர்.
வீரலட்சுமி அவர்கள் வன்னியர் இல்லை என்றும் நாயுடு என்றும் மேலும் சென்னை பெருநகர் காவல் நிலைய அலுவலகத்தில் வருகை தரும் போதே செய்தியாளர்கள் சந்திப்பில் நாம் தமிழர் கட்சி தொண்டர்கள் தெரிவித்ததாகவும் மேலும்
நாம் தமிழர் கட்சியின் தொண்டர்கள் உட்பட தமிழர் முன்னேற்றக் படை தலைவர் வீரலட்சுமி அவர்களை பெண் என்றும் பாராமல் ஆபாசமாக பேசி மன உளைச்சலுக்கும் உடல் ரீதியும் பாதிப்படைந்த காரணத்தாலும் மேலும் தன்னுடைய சாதியின் அடிப்படையில் பேரிழப்பு ஏற்படுத்தியதாகவும், மற்றும் திருவள்ளூர் மாவட்டத்தில் சுவாமியை தரிசிக்க வந்த போதும் நாம் தமிழர் கட்சி தொண்டர்கள் தொடர்ந்து தனக்கு உயிருக்கு ஆபத்தை விளைவிக்கும் அச்சுறுத்தும் விதமாகவும் ஆபாசமாக பேசியதாகவும் குற்றம் சாட்டி உள்ளார்.
இதை அடுத்து நாம் தமிழர் கட்சி நிறுவன தலைவர் சீமான் அவர்கள் கட்சியின் சார்பிலும் கட்சியின் தொண்டர்கள் சார்பிலும் வீரலக்ஷ்மி இடம் மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும் மன்னிப்பு கூறாத பட்சத்தில் நீதிமன்றத்தில் நாடி நஷ்ட ஈடாக இரண்டு கோடி ரூபாய் வழங்கிட வேண்டும் எனவும் நீதிமன்ற நோட்டீஸில் குறிப்பிட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.