சீமான் தோற்பது உறுதி.. பாஜக மாநில தலைவர் அண்ணாமலை நக்கல் பேச்சு..!!
கோவை பேரூர் பகுதியில் நடைபெறும் நொய்யல் திருவிழாவின் 5ம் நாள் நிகழ்வில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கலந்து கொண்டு பாரம்பரிய கலை நிகழ்ச்சிகளை பார்வையிட்டு விழாவில் உரையாற்றினார். பின்னர் நொய்யல் ஆராத்தி வழிபாட்டில் கலந்து கொண்டார்.
இந்நிகழ்விற்கு பின் செய்தியாளர்களை சந்தித்த அவர், மத்திய அரசு முக்கியமான முடிவை கேபினட் யில் எடுத்துள்ளார்கள். LPG சிலிண்டர் விலை நேரடியாக 200 ரூபாய் குறிக்கப்படும். இது 33 கோடி குடும்பங்களுக்கும் அமல்படுத்தப்படும். இது இன்று ரக்ஷா பந்தன் ஓணம் திருநாள்.
இது அனைத்து மகள் இருக்கும் வரப்பிரசாதமாக அமையும். 200 ரூபாய் நேரடியாக வங்கி கணக்கிற்கு வந்துவிடும். மேலும் உஜ்வாலா திட்டத்தின் கீழ் யாரெல்லாம் சிலிண்டர் பெற்றுள்ளார்களோ அவர்களுக்கு கடந்த நான்கு ஐந்து மாதங்களாக வழங்கப்பட்டு வந்த 200 ரூபாய், மேலும் ஒரு 200 ரூபாய் கூடுதலாக வழங்கப்பட உள்ளது.
37 லட்சம் குடும்பத்தினர் உஜ்வாலா திட்டத்தின் கீழ் சிலிண்டர் பெற்றுள்ளனர். இதனை நாம் அனைவரும் நிச்சயமாக பாராட்டியாக வேண்டும். உலகில் ரஷ்யா உக்கரை போருக்கு பிறகு Natural gas, LPG கேஸ் விலை 200 சதவிகிதம் எல்லாம் ஏறிய போதிலும் கூட, மத்திய அரசு அதனை பெரிய அளவில் ஏறவிடாமல் பார்த்துக் கொண்டார்கள், இருப்பினும் அது சாமானிய மக்களுக்கு சுமையாக இருந்தது.
இதனை மக்களும் பலமுறை தெரிவித்து வந்தனர் மத்திய அரசு இந்த விலை உயர்வை குறைக்க வேண்டும் என கோரிக்கை விடுத்து வந்தனர். அவருக்கு நம் பிரதமர் எப்படி கடந்த தீபாவளியன்று பெட்ரோல் டீசல் விலையை குறைத்தார்களோ அதே போல் இந்த ரக்ஷா பந்தன், ஓணம் திருநாளில் கேஸ் விலையை குறைத்துள்ளார்கள்.
மேலும் வருகின்ற காலங்களில் கேஸ் விலையை மேலும் குறைப்பதற்கு தற்பொழுது உள்ள சப்ளையர்களை தாண்டி வேறு நாட்டில் இருந்து வாங்குவதற்கும் முயற்சிகள் மேற்கொண்டு வருகிறார்கள்.
கோவையில் ஒரு பக்கம் விமான நிலைய விரிவாக்க பணிகள் நடைபெற்று வருகிறது, கிட்டத்தட்ட நிலம் கையகப்படுத்தும் பணிகள் 100% முடிக்கப்பட்டுள்ளது. அதற்கான இழப்பீடுத் தொகையும் மக்களுக்கு கொடுக்கும் பணிகள் நடைபெற்ற வருகிறது. அதே நேரத்தில் விமான நிலையத்தில் இருக்கின்ற மிகப்பெரிய பிரச்சனை Code Share உள்ளது.
அம்ருத் ரயில் நிலையங்களை பொறுத்தவரை இந்தியாவில் உள்ள 500க்கும் மேற்பட்ட ரயில் நிலையங்களின் விரிவாக்க பணிகள் 25 ஆயிரம் கோடிக்கும் மேல் தேர்ந்தெடுத்து வேலைகள் செய்ய ஆரம்பித்தோம்.
இந்த அம்ருத் ரயில் நிலையத்தில் கோவை ரயில் நிலையம் இல்லை என்று பலரும் கேள்வி எழுப்பப்பட்டது. இதற்கான கேள்வியை நாங்கள் ரயில் நிலைய அதிகாரிகளிடம் முன் வைக்கும் பொழுது அந்த அதிகாரிகள், “கோவையில் இருந்து 34 ரயில்களின் புறப்படுகிறது, 96 ரயில்கள் கோவை வழியாக செல்கிறது, கோவையில் புதிதாக ரயிலை இயக்குவதற்கு இடம் கிடையாது” என தெரிவித்தனர்.
அப்படி இருந்தும் நாம் வந்தே பாரத ரயிலை கோவைக்கு இயக்கியுள்ளோம். எனவே கோவைக்கு அருகில் உள்ள போத்தனூர் ரயில் நிலையத்தை அம்ருத் திட்டத்தின் கீழ் விரிவாக்கம் செய்யும் பணியை மத்திய அரசு கையில் எடுத்துள்ளது.
இதன் மூலம் கோவையை பொருத்தவரை இரண்டு பெரிய ரயில் நிலையங்கள் கிடைக்கும். 24 கோடி மதிப்பில் பணிகள் நடைபெற உள்ளது. 2024 ஆம் ஆண்டு தேர்தலுக்கு முன்பு கோவை விமான நிலையத்தில் உள்ள சிறு சிறு பிரச்சனைகளை சரி செய்கின்ற முயற்சியே ஒரு கட்சியாக நாங்கள் கையில் எடுத்துள்ளோம்.
நாளை மறுநாள் பியூஸ்கோயல் கோவை வருகிறார். அவருடன் தொழில் நிறுவனங்கள் கலந்துரையாட உள்ளனர். மேலும் அன்றைய தினம், இந்தியாவின் முதல் நிதி அமைச்சரான கோவையை சேர்ந்த சண்முகம் செட்டியின் திருவுருவ சிலையை திறந்து வைக்க உள்ளார்.
எனவே பிரதமருங்க நிற்க வேண்டுமென்று மக்கள் விருப்பப்படுகிறார்கள். திமுகவில் அதிகமான ஊழல்வாதிகள் இருக்கிறார்களே அவர்களை எதிர்த்து சீமான் போட்டியிடட்டுமே, பிரதமர் என்ன ஊழல் செய்தார்?. சீமான் திமுகவினரை எதிர்த்து வெற்றி பெற வேண்டுமே தவிர நல்லது செய்ய வேண்டும் என்று எதிர்பார்க்கின்ற மோடியை எதிர்த்து எதற்கு போட்டியிட வேண்டும்? அதையும் மீறி சீமான் பஜாகை எதிர்த்து போட்டியிட்டால் தோல்வி நிச்சயம்..
சிறுகதைகள் – 75 | தொடர் கதை – 2 | கிரைம்- 572 + | கவிதைகள் – 150 + | எழுத்தாளர் – 4000 + | ஆன்மிகம் தொகுப்பாளர்
நம்மை வீழ்த்தியவர்கள் முன் ஜெயிக்க வேண்டுமே.. தவிர அடுத்தவர்களை வீழ்த்தி ஜெயிக்க கூடாது..