கோயம்புத்தூரில் மார்ச் 19 வரை ட்ரோன்கள் பறக்க தடையா..??
கோயம்புத்தூர் மாவட்டத்தில் கோவை மற்றும் பொள்ளாச்சி ஆகிய இரண்டு லோக்சபா தொகுதிகள் உள்ளன.
பிரதமர் மோடி வரும் 18ஆம் தேதி கோயம்புத்தூருக்கு வருகிறார். கோவையில் வழக்கமாக அவர் பொதுக்கூட்டங்களில் கலந்து கொள்ளக் கூடியவர். ஆனால், தற்போது பொதுக் கூட்டத்துக்கு பதிலாக, ரோடு ஷோ நிகழ்ச்சியில் பங்கேற்று மக்களைச் சந்தித்து பிரச்சாரம் செய்ய போகிறார்.
பிரதமர் மோடி வருகையை முன்னிட்டு பல்வேறு ஏற்பாடுகளை பாஜகவினர் செய்துள்ளனர். செய்தியாளர்களிடம் பேசிய கோயம்புத்தூர்
மாநகர மாவட்ட பாஜக தலைவர் ஜெ.ரமேஷ்குமார், பிரதமர் மோடி வரும் 18ஆம் தேதி கவுண்டம்பாளையத்தில் ‘ரோடு ஷோ’ நிகழ்வைத் தொடங்கி வைத்து அதில் கலந்து கொள்கிறார். அங்கிருந்து மேட்டுப்பாளையம் சாலை வழியாக, ஆர்.எஸ்.புரம் சென்று, அங்குள்ள தலைமை அஞ்சல் நிலையம் சந்திப்பு அருகே இந்த ரோடு ஷோ முடிவடைய உள்ளதாக தெரிவித்தார்.
பிரதமர் மோடி வருகையையொட்டி கோயம்புத்தூரில் இன்று முதல் மார்ச் 19 வரை ட்ரோன்கள் பறக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. துடியலூர், கவுண்டம்பாளையம், சாய்பாபா காலனி, வடகோவை, ஆர்.எஸ்.புரம் ரெட் ஜோனாக அறிவிப்பு 18ஆம் தேதி 5,000க்கும் மேற்பட்ட காவலர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.