பாலக்காடு வந்த பிரதமர் மோடி..! கூட்டத்தில் சொன்ன அந்த ஒரு வார்த்தை..?
கேரள மாநிலம் பாலக்காட்டில் இருந்து பொதுக்கூட்டத்தில் பங்கேற்க சேலம் வந்த பிரதமர் மோடிக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. அதனை தொடர்ந்து கெஜல்நாயக்கன்பட்டியில் நடைபெறும் பாஜக பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டார்.
அதனை தொடர்ந்து மாநாட்டில் உரையாற்றிய பிரதமர் மோடி, தமிழ் மொழியே மூத்த மொழி, இந்தியாவுக்கு தமிழ் மொழியால் பெருமை என கூறிய அவர், தமிழ் மொழியின் பெருமைகளை உலகம் அறிய செய்வேன் என்று தெரிவித்தார்.
மேலும், பெண்களின் நலனுக்காக பல நல திட்டங்களை கொண்டு வந்துள்ளதாக தெரிவித்த பிரதமர் மோடி, தமிழ்நாட்டில், அடுத்த 5 ஆண்டுகளில் பெண்களுக்கான நலத்திட்டங்கள் அனைத்தும் வந்து சேரும் எனவும் கூறினார்.
இந்த பொதுக்கூட்டத்தில் பாமக நிறுவனர் ராமதாஸ், அன்புமணி ராமதாஸ், ஓ பன்னீர் செல்வம், டிடிவி தினகரன், ஜி.கே வாசன், ஏ.சி சண்முகம் உள்ளிட்ட கூட்டணி கட்சியினர் கலந்து கொண்டனர்.
சிறுகதைகள் – 75 | தொடர் கதை – 2 | கிரைம்- 572 + | கவிதைகள் – 150 + | எழுத்தாளர் – 4000 + | ஆன்மிகம் தொகுப்பாளர்
நம்மை வீழ்த்தியவர்கள் முன் ஜெயிக்க வேண்டுமே.. தவிர அடுத்தவர்களை வீழ்த்தி ஜெயிக்க கூடாது..